Saturday, June 15, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 20/2013)


நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன். - ஷிர்டி சாய்பாபா
Posted: 14 May 2013 03:00 PM PDT
நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த  மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன். சத்குரு ஷிர்டி சாய்பாபா          
Posted: 16 May 2013 03:00 PM PDT

என்னைச் சார்ந்திருப்பவர்களின் யோகச் ஷேமங்களிலேயே என் ஆனந்தம் இருக்கும்.இது உண்மை.இதமானவற்றைச் சொல்லவே நான் இருக்கிறேன்.கேட்டும் கேளாதவர் போல் இருப்பவரை எந்த சக்தியாலும் காப்பாற்ற இயலாது.காலத்தின் ஓட்டத்தால் அவ்வாறு நிகழ்ந்ததுஎன்று சமாதானப்படுவதால் பலன் ஒன்றும் இல்லை.நாமாக பின்பற்ற வேண்டிய  ஜாக்கிரதைகள் உள்ளன.சாத்தியமானவரை,சாமார்த்தியமாகத் தப்பித்துக் கொள்ளும் முயற்சியும் கூட செய்யவேண்டும்.புதை சேறு இருக்கிறதென்று தெரிந்தும் கூட,எப்படியிருக்குமோ பார்க்கலாம் என்று  இறங்குபவர்கள் அதன் பலனை அனுபவித்தேயாக வேண்டும்.நான் உங்கள் பளுவைச் சுமப்பேன் என்பது வாஸ்தவமே.எப்போது சுமப்பேன்?எனது பேச்சை நீங்கள் கௌரவிக்கும்போது மட்டுமே.என்னைச் சரணடைந்த போது மட்டுமே பாரத்தைச் சுமப்பேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
Posted: 17 May 2013 04:13 PM PDT

உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளாகவும் நானே இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருக்கும்போது பயம் ஏன்?பயமற்று இருங்கள்!ஏக்கம் ஏன்?எனக்காகவே ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்?என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்?எனக்காகவே கவலைபடுங்கள்.பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]

Posted: 18 May 2013 03:00 PM PDT
ஒரு குரு பெளர்ணமி தினம். என் குருவான உபாசினி மகராஜ் ஷிர்டியை விட்டு கரக்பூருக்கு போவதற்கு முன் அது. சாயி பாபா என்னிடம் பூஜை சாமான்களையும், நைவேத்தியத்தையும் எடுத்துச் சென்று மகராஜுக்கு பூஜை செய்யும் படி பணித்தார். பாபாவின் ஆணை எனக் கூறி மகராஜை நான் பூஜை செய்யத் தொடங்கினேன். மகராஜ் என்னைத் தடுக்கவில்லை. ஆனால் அந்த தினத்திற்கு பிறகு நான் மகராஜை ஒரு போதும் பூஜை செய்யவில்லை. அவரிடம் என்னகுள்ளது ஒரு குருபந்துவினிடம் இருக்க வேண்டிய எண்ணமே. ஷிர்டி மக்கள் பலரைப் போல் நான் அவரிடம் வெறுப்பு காட்டவில்லை. சாயிபாபா அடிக்கடி சொல்வார்; "நாம் யாரிடமும் வெறுப்பு கொள்ளக்கூடாது; பொறாமை, விரோதம், எதிர்ப்பு, சண்டைபோடும் மனோபாவம் ஆகியவை தவிர்க்கப்படவேண்டும்."  ஆனால் உபாசினி மகராஜிடம் என் மனோபாவத்தை அவரும் மற்றவர்களும் தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பஞ்சகன்யா நிறுவனத்தில் கொண்டு வரப்பட்ட சில மாற்றங்களில் உதவும் நோக்கத்துடன் நான் சகோரிக்குச் சென்றேன். ஆனால், என் எண்ணம் அவருக்கு எதிராக இருக்குமெனக் கருதி, மனம் விட்டு தனியாக அவரிடம் பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை. நான் திருபினேன்.

என்னிடமும் என் குடும்பத்திடமும் சாயிபாபா காட்டிய பிரிவு 1918-ல்  அவர் இறப்பதற்கு முன் மட்டுமின்றி பின்னரும் வெளியாயிற்று.

1918-
ம் ஆண்டு தசராவுக்கு முன்று மாதங்களுக்கு முன்பு தாம் உடலை விட்டபிறகும் என் நல்வாழ்வைப் பற்றி எண்ணியிருந்தார். "பாய்!(அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்) நீ என்னைக் காண இனி இங்கே வந்து சிரமப் பட வேண்டாம். நீ எங்கிருந்தாலும், உன்னுடனேயே நான் இருக்கிறேன்" என அவர் என்னிடம் உறுதி அளித்தார். (இதைச் சொல்லும்போது அந்த அம்மையாரின் கண்களில் நீர் பெருகியது) - சந்திர பாய். ஷிர்டி சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்.     





1 comment:

  1. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள்... நன்றி...

    ReplyDelete