Saturday, February 23, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 8/2013)




Posted: 17 Feb 2013 02:00 PM PST

எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு.சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே.நீ துவாரகாமாயியின் குழந்தை.துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆகிறார்.-ஷீரடி சாய்பாபா.
Posted: 18 Feb 2013 02:00 PM PST
"நீங்கள் என்னிடம் அனன்னியமான [வேறொன்றிலும் நாட்டமில்லாத]அன்பு செலுத்துங்கள்.நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன்.காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார்.குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் பேறு பெற்றவனாவான்".-ஷீரடி சாய்பாபா.
Posted: 19 Feb 2013 02:00 PM PST
பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம்.அதைத் தொலைத்துவிடாதீர்கள்.எப்பொழுது பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அது உங்களைக் கரைசேர்க்கும்.
சகிப்புத்தன்மைதான்,ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை.இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்ப்புகளையும் வெல்கிறது.சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது.
பண்டிதராக இருந்தாலும் சரி,நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி,சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.
குரு  மஹாபலம் படைத்தவராக இருக்கலாம்.ஆயினும்,ஆழமாக பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார்.-ஷீரடி சாய்பாபா.[ஸ்ரீ சாயி இராமாயணம் ]
Posted: 20 Feb 2013 02:00 PM PST
பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி,கபடரானாலும் சரி,கடைசியில் கரையேற்றப்படுவார்.செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது;பலனை அளிப்பவர் 'எல்லாம் வல்ல சாயிபாபா'என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ,அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

Posted: 21 Feb 2013 02:00 PM PST

எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள்.பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள்.சாயி சர்வசக்தியும் நிரைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள்.பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்;எல்லா சித்திகளையும் பெறுவீர்கள்.
மாறாக,மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து,'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.
Posted: 22 Feb 2013 02:00 PM PST
'உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ நட;மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் அவர் நடக்கட்டும்.பிறரை பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராக செயல்படாதே'.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

Posted: 23 Feb 2013 02:00 PM PST
யார் எதைச் சொன்னாலும் சொல்லட்டும்.அவையனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ளலாம்.ஆனால்,நம்முடைய  லட்சியப்பாதையிலிருந்து தடம்புறளகூடாது .நம் குருவின் வார்த்தைகளை மறந்துவிடக்கூடாது.
குருவின் திருவாய்மொழிதான் நமக்கு பரம மங்களங்களை விளைவிக்கும்.அதுதான் நம் போதியும் புராணமும் அனுஷ்டானமும் ஜபமும் தவமும்-அனைத்தும் ஆகும்.-ஸ்ரீ சாயி இராமாயணம்.

No comments:

Post a Comment