Saturday, February 2, 2013

"பசுக்களுக்கு அரிசி உணவு கூடாது'


கறவைப் பசுக்களுக்கு அரிசி உணவை அதிக அளவு கொடுக்கக் கூடாது என்றும், இதனால் கறவை மாடுகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆட்சியர் விஜய் பிங்ளே எச்சரித்துள்ளார்.
கறவை பசுக்கள், ஆடுகள் அதிக அளவு மாவுச்சத்துப் பொருளை உண்பதால் வயிறு உப்பசம் (அமிலத்தன்மை நோய்) ஏற்பட்டு கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்படும். 
மேலும், கறவை பசுவின் இனவிருத்தி தன்மை குறைந்து தனது ஆயுல்காலத்தில் சராசரியாக 10 கன்றுகளை ஈன்ற வேண்டிய பசுக்கள், ஆடுகள் 5 முதல் 6 கன்றுகளை மட்டுமே ஈனக்கூடிய நிலைக்கு ஆளாகும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Source:://dinamani.com/edition_vellore/thiruvannamalai/article1321143.ece  

No comments:

Post a Comment