Wednesday, February 13, 2013

DESI-COW தமிழாக்கம்-நாட்டு மாடு-மறைந்துவரும் இனம்!


இந்தியத் திரு நாட்டில் பால் என்பது ஏதோ ஒரு பானம் மட்டுமல்ல; அது ஒரு ஒளடதம்! ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் இனிய காலையின் பால் கோப்பை என்பது வலிமை வாய்ந்த உணர்ச்சியூட்டும் ஒரு பானம். அது தாயின் அரவணைப்பு, உடல், உள நலத்தைக் குறிப்பிடுகிறது. பாலின் மேல்வைக்கும் நம்பிக்கை வலிமையான அடிப்படையில் அமைந்த்ததாகும். இளையவருக்கும் முதியவர்களுக்கும் சக்தி அளிக்கும் ஓர் உணவு. இந்தியர்களது உணவில் கிட்டத்தட்ட 63 விழுக்காடு மாமிசப் புரதச் சத்து பால்ப் பண்ணை விளைபொருள்களினின்றே கிடைக்கிறது. சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கு வேறு மாற்றே கிடையாது.

இந்து மதம், இறையியல், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றில் உணர்வுபூர்வமாக மக்கள் மனங்களில் இடம்பெற்றது பசு மாடு என்ற எண்ணம். கருத்து இறைவன் படைப்பு போன்றவை. இந்து சமுதாயத்தில் பசுமாடு இறைவி காமதேனு-வேண்டுவனவற்றை எல்லாம் தரும் பசுவாக- வழிபட்ப்படுகிறது.. பாரதத்தின் கிராமீய வாழ்வின் மைய்மாக பசுக்கள் புல்மேய்தல், புல்வெளிகள், மயக்கும் மாலைப் பொழுதில் புல்மேய்ந்து வீடு திரும்பும் பசுக்கள் எழுப்பும் புழுதிப் புயல்- ஆகியவற்றை அழகாகப் படம்வரைந்து பிரேம்சந்த் என்ற ஓவியக் கலைஞர் நம் கண் முன் கொண்டுவந்து திரைப்படமாய்க் காட்டுகிறார்!
மேலும் பசு வழிபாடு என்பது செயல்முறை அடிப்படையில் அமைந்தது ஆகும். பாரம்பரியமாக உலகத்திலேயே மிக அதிக அளவிலான பசுவினங்களுக்கு உறைவிடமாக இருப்பது இந்தியா. பஞ்ச காலத்திலும் பால்தரும் சிகப்புத்தோல் கொண்ட ‘சாஹிவால்இனப் பசுக்கள்; வலிமையான வாள் செய்யும் அளவிற்கு வலிமையுள்ள கொம்புகளைத் தரக்கூடிய   வளம் வாய்ந்த அம்ரித் மகால் இனப்பசுக்கள்; ஒரு நாயின் உயரமே உள்ள ஒரு சிறிய பசு இனம் வெச்சூர். வெவ்வேறு வெட்பதட்ப  நிலைகளுக்கேற்ற வெவ்வேறு வித பசு இனங்கள். கிராமீயப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்குவன இவ்வகைப் பசுமாடுகள். பராமரிப்பிற்கு அதிகச் செலவில்லாத வகை பசுக்கள்,வருமையில் வாடும் மக்களுக்கு ஊட்டச்சத்துள்ள, அதிக அளவு பால் சுரக்கும் பசுக்கள், வாழ்வாதாரமாய் விளங்கின.; மிச்சமுள்ள பாலை கிராமத்து மக்கள் அரசு நடத்தும் பால்கூட்டூறவு அமைப்புகளுக்கும், தனியார் அமைப்புகளுக்கும் விற்று வருவாய் ஈட்டினர்; அத்தகு அமைப்புக்கள் பாலினை நகரத்து நிறுவனங்களுக்கு அனுப்பி, அமுல், விஜயா, வெர்கா, சரஸ், நெஸ்லே, பிரிட்டானியா போன்ற பெயர்களில், நகர்ப்புற மக்களுக்குக் கிடைக்க துணை செய்தனர்

இந்திய பொருளாதரத்தில் பசுக்களின் பங்கினை மிகைப்படுத்திக் கூறமுடியாது. உலகத்திலேயே மிக அதிக அளவில் பால் உற்பத்தி செய்வது இந்தியாவே. ஆச்சரியப்படும் அளவில் 63 விழுக்காடு பால் தரும் பசுக்களை நிலமற்ற, சிறுநிலம் வைத்திருக்கும் விவசாயிகளே பராமரித்து வருகின்றனர்; ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பால் விற்பனைக் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை விற்று வருகின்றனர்; ஒருகோடியே ஒரு லட்சம் உறுப்பினர்கள் இக்கூட்டுறவு சங்கங்களில் உள்ளனர். இந்த நரம்பு நாடிகள் நாட்டிலுள்ள அனைத்துச் சமுதாயங்களையும் பிணைக்கின்றன. உண்மையில், நெல், கோதுமை, சர்க்கரை இவற்றைக் காட்டிலும், விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பாலே!

ஆனால், இன்னும் பத்து ஆண்டுகளில் இந்நிலை மறையக் கூடிய நிலையில் இருக்கிறது. இருப்பினும் இந்த நிகழ இருக்கும் பேரிழப்பைப் பற்றி உணர்ந்து அதைத்தடுக்கும் முயற்சியை யாரும் செய்வதாகத் தோன்றவில்லை. இந்நாட்டின் 66வது குடியரசு நாளைக் கொண்டாடுமுன், அச்சத்தையும், சிந்தனையையும் தூண்டக்கூடிய நினைவு- இப்படிப்பட்ட நமது நாட்டுப் பசுக்கள் நமது விலைமதிக்கமுடியாத சொத்து-சிறிது சிறிதாக அழிந்து, ஒரு பத்து ஆண்டுகளுக்குள் இந்த நாடு பாலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டு விடுமோ என்பதே. இந்த நிலை லட்சக்கணக்கான மக்களுக்கு கற்பனை செய்யமுடியாத இழப்பினையும், துயரத்தினையும் ஏற்படுத்தும்.

இந்த இழி நிலைக்கு அரசின் பாராமுகமும், நெடுந்தொலைவற்ற பார்வையும், திட்டமிட்டுச் செயலாற்றாமையுமே காரணமாகும். உலகத்தின் மிகப்பெரும் கால்நடைச் சொத்து இந்தியாவில் இருக்கிறது; ஆனால் வாடி வரும் இந்தப் பசுக்களின் பால் சுறக்கும் நிலை குறைந்து வருகிறது. சிறு வேளாண் குடிமக்களுக்கு, பசுமாடுகளுக்குத்தேவையான உணவும், தண்ணீரும் கிடைக்க வழி செய்தால், வியத்தகு முன்னேற்றம் காணலாம். (பிரேஜிலில் இந்திய பசுமாடுகள் மிக நல்ல பயன்களைக் கொடுக்கின்றன. 2011 ஆம் ஆண்டில் ‘க்விம்மாண்டா கால்என்ற இந்தியப் பசு, தன்னுடைய 2010ஆம் ஆண்டு சாதனையை முறியடித்து, 10230கிலோலிட்டர் பால் கொடுத்தது; சராசரி ஒருநாளைய பால் 56.17 கிலோலிட்டர்கள்!)இந்தியப் பசுக்களின் பால் அளவு குறைவதற்கான காரணங்களை ஆய்ந்து பார்க்காது, அதை முன்னேற்ற முயற்சி செய்யாது அரசு 1960களில் இறக்குமதி செய்யப்பட்ட காளைகளோடு இந்திய உள்ளூர் பசுக்களை கருத்தரிக்கச் செய்து அவற்றினுடைய விந்து அணுக்களைப் பயன்படுத்தத் துவங்கினர்.

இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து ஆண்டாண்டுகளாகக் கடைப் பிடித்து வந்தனர்., நாளடைவில் இப்பழக்கம் இருதலை நெருக்கடியை உண்டு பண்ணியது. ஒருபுறம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்த இந்திய நாட்டுப்பசுக்கள், படிப்படியாக முறையாக, அழிக்கப்பட்டு வருகிறது; மறுபுறம், வெளிநாட்டினின்று, இங்கே கொண்டுவரப்பட்டு இடைககருவேற்றுதல் வழி வந்த பசுக்கள் இந்திய சூழ்நிலையை வரித்துக் கொள்ளவில்லை. இப்படிக்கருத்தரிக்கப்பட்ட பசுக்கள் அதிக அளவில் பால் கொடுக்கமுடியும் என்றாலும், நம்நாட்டு வெட்ப நிலை, உணவு இவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாமல் நோய்வாய்ப்பட்டு அவற்றின் முழு சக்தியைக் காப்பாற்றி பால் சுரக்க முடிவதில்லை. இந்திய பசுக்களைப்போல் அன்றி, இந்த அன்னிய பசுஇனம் தனியாக, குளிர் சாதன வளாகத்தில் வைக்கப்பட்டு, மிக விலையுயர்ந்த உணவு, மருத்துவ வசதியை வேண்டி நிற்பதால், பராமரிப்புக்கு வேண்டிய பணத்தேவை மிக மிக அதிகரிக்கிறது.

நமது சாதாரண விவசாயிகள் இதைப்போன்ற பசுஇனத்தைப் பராமரிக்கும் தகுதியும், பொருள் வளமும் பெறவில்லை. அரசின் மெத்தனத்தினால், குறைந்த சிலவில், நமது வெட்பதட்ப நிலைக்கேற்ற நன்கு வளரக்கூடிய உள்ளூர் பசுவினம் மெள்ள மெள்ள நலிந்து, அழிந்து வருகிறது. மாடுகளைப் பராமரிப்பது சிறு விவசாயிகளுக்கு இயலாததாகின்றது. லட்சக்கணக்கன விவசாயிகள் விரைவில் தமது வாழ்வாதாரத்தை இழந்து, அவர்கள் குடும்பத்தினருக்கே ஒரு கோப்பை பால் கிடைப்பது கூட அரிதாகிவிடும்- பெரிய பால்பண்ணைகளிடமிருந்தும், வெளியிலிலிருந்தும் வாங்க முடிந்தாலே பால் அருந்த முடியும் என்ற நிலை உருவாகி வருகின்றது.
மலர்ந்துவரும் நெருக்கடிச் சூழ்நிலை இத்துடன் முடிவதில்லை. நமது நாட்டுப் பசுவின் அழிவு, நகர்புற மக்களையும் பாதிக்கக் கூடியதே..இன்னும் பத்து ஆண்டுகளில் நவீன தொழில்முறை பால்பண்ணைப் பொருட்கள் உற்பத்தி செய்யும்பொழுது, தற்பொழுது உள்நாட்டுப் பசொக்களோடு தன்நிறைவு பெற்றுள்ள நிலையில் இருக்கும் நாம், வெளிநாட்டினின்று மிகுந்த அளவில் பால் இறக்குமதி செய்யவும், பால் துறையைச் சார்ந்த அயல்நாட்டு விந்துவிலிருந்து, நம்நாட்டில் இருக்கும் அன்னியப் பசுவினத்திற்கான உணவுப் பொருட்கள் வரை அனைத்துத் தேவைகளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.. இவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்த அன்னிய நாடுகள், சந்தைகள் பாலின் விலையையும் நிர்ணயம் செய்யும் நிலையைப் பெறும். நமது நாட்டுப் பசுதரும் பாலைப் போல அல்லாது, வெளிநாட்டுப் பசுக்களின் பால் நீரிழிவு, இருதய நோய் ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்குப் பலன் அளிக்காது.

அன்னியப்பசொக்களினால் பெற இருக்கும் நன்மைகளும் , பயன்களும் தற்காலியமானதாகவே இருக்கும். துவக்கத்தில் அதிக அளவு பால் தரும் இப்பசுக்கள், விரைவிலேயே பால் தரும் சக்தியை இழந்து விடுகின்றன. மேலும் அன்னியப் பசுக்கள் நம்மூர் பசுக்களைப் போன்று வலிமை படைத்தவையும் அல்ல. இது ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கி வருகிறது. பால்தரும் சக்தி நின்றவுடன் ஆயிரக்கணக்கான இத்தகு அன்னியப் பச்க்களைப் பராமரிக்க இயலாது அதன் உரிமையாளர்கள் அவற்றை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். தெருவில் திரியும் இந்த மாடுகள் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமன்றி, குறைந்துவரும் நாட்டின் வளத்தையும் வீணாக்குகின்றன. “பஞ்சாப் கோ சேவா வாரியம்அண்மையில் நடத்திய அளவெடுப்பில் தெருக்களில் திரியும் ஒருலட்ச மாடுகளில் 80 விழுக்காடு அன்னியப்பசுக்கள் என்று கண்டனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த “பா கோ வாவின் தலைவர் திரு கிம்டி பகத் அரசின் அன்னியப் பசுக்களின் ஆர்வத்தினை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்தி வருகிறார்.
இறுதியில் நம்மூர் பசுக்களின் வாரிசுகள் மங்கி வருகின்றது. ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டு இவ்வகை ஆவினங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அந்நிலையைச் சரிசெய்வது என்பது இயலாத பணியாகிவிடும்.
அன்னிய வியாபரம், சந்தைக்காக, நமது உணவுப் பாதுகாப்பை சீரழித்துக் கொண்டும், விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைக்கும் முயற்ச்சியிலும் ஈடுபட்டு, அன்னிய பால்பண்ணைத் தொழிலின் கட்டுப்பாடு விரிக்கும் வலையில் மாட்டிக் கொள்ள இருக்கிறோம். இந்தச் சீரழிவை நோக்கி நாம் செல்லுவதற்குப் பல காரணங்கள் உள்ளன- ஒவ்வொன்றும் வேதனை கலந்த சோகக் காட்சிகளாய் மலர்கின்றன.

இத்தகு பால்நெருக்கடிக்கும், வர இருக்கும் நம் நாட்டுப் பசுக்களின் அழிவிற்கும்  ஒரு முக்கிய காரணம் அரசின் தவறான அன்னியப் பசுக்கள்பால் வைத்த மோகம். உண்மை தெளிவாகத், தெரிந்தும் எந்த அரசும் தமது கொள்கையை மாற்றிக்கொள்ள முயற்ச்சிக்கவில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், நமது உள்ளூர்ப் பசுக்களைப் பற்றி தவறான கருத்துக்களை வேண்டுமென்றே பரப்புவதும் ஆகும்., இந்திய நாடு விரைவிலேயே இறக்குமதி சார்ந்த நாடாக ஆவதற்கு வழிகோலுகிறது.

அந்த வரலாற்றைப் பாருங்கள். 1951 ஆம் ஆண்டிலிருந்து பால் உற்பத்தி 17மில்லியன் டன்னிலிருந்து 122 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இது ஒரு நேர்மறை வளர்ச்சியாகக் காணப்படினும், உண்மையில் இது ஒரு பெருமைப்படும்  செய்தி அல்ல; ஏனெனில் உலகத்திலேயே மிக அதிக அளவிலான 200 மில்லியன் பசுக்கள் நம் நாட்டில் உள்ளன. அவற்றின் சராசரிப் பால் சுரக்கும் அளவு 3.23கிலோ அளவே ஆகும்; உலகச் சராசரி 6.68 கிலோவாகும்.
இன்னும் பத்து ஆண்டுகளில் நமது நாட்டின் பால் தேவை 180 மில்லியன் டன் ஆக இருக்கும் என அளவிடப்படுகிறது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் இவ்வாறு எச்சரிக்கிறது: “ இந்தியா சரியான வேகத்தில் முன்னேற வில்லையென்றால், மிகப்பெரிய அளவில், பால் இறக்குமதிக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும். அது பால் விலையினை ஏற்றிவிடும் என்று.
துரதிருஷ்டவசமாக இந்த எச்சரிக்கைக்கு நமது விடை வேதனை அளிப்பதாக உள்ளது. நாட்டில் உள்ள எல்லா மாநில அரசுகளும், நமது உள்ளூர் பசுக்களைவிட்டுவிட்டு, அன்னியப் பசுக்களை அதிகமாக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளன. பஞாப் மாநில முதல்வர் திரு ப்ரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் மாட்டுப்பண்ணை உயர் கல்வி நிலையம் ஒன்றை இஸ்ரேலின் உதவியோடு அமைக்கத் திட்டமிட்டுள்ளார்.  முன்பு அமெரிக்காவிலிருந்து விந்தணுக்களைப் பெற்று வந்தது இம்மாநிலம். உள்ளூர் பசுக்களைக் கருத்தரிக்கச் செய்ய வேண்டி கேரள மானிலம் டென்மார்க்கிலிருந்து அன்னியப் பசுக்களைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய வாரியமே 100 ‘ஹோல்ஸ்டின் ஃப்ரீசியன் காளைகளையும், 300 ‘ஜெர்ஸிகாளைகளையும் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலாக நோக்கும்பொழுது இவையெல்லாம் நல்ல வழிகளாகத் தோன்றலாம். ஹரியானாவில் உள்ள கர்னால் அருகே அமைந்த ஒரு கிராம நடுத்தர விவசாயி ரஜ்பீர் சிங் வேண்டுமென்றால் அவ்வாறு நினைக்கலாம்.  2009ஆம் ஆண்டில் கர்னாலில் உள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் அவருடைய “ஃப்ரெசியன் க்ராஸ் ப்ரீட் இரண்டு மாடுகளை கங்கா, யமுனா என்று பெய்ரிடப்பட்டவை- இந்தியாவின் மிக அளவில் பால் தரும் பசுக்கள் என அறிமுகப் படுத்தியது. அவை கொடுத்த பாலின் அளவு நாள் ஒன்றிற்கு முறையே 31.5 கிலோ, 59.5 கிலோ ஆகும்.
இதுவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் கடந்த ஆண்டு இரண்டுள் இளைய பசு யமுனா இறந்து விட்டது. ஆனால் கங்கா மிகவும் வியக்கத்தக்க முறையில் அன்னியப் பசுக்களுக்குள் அந்த வட்டாரத்திலேயே முதன்மைபெற்றுத் திகழ்கிறது. அந்தப் பகுதியில் 30-35 கிலோ அயல்நாட்டுப் பசுக்கள் பால் தருவது சாதாரண விஷயமே ஆகும். கடந்த பத்தாண்டுகள் காலத்தில் அரசுகள் அயல் நாட்டுப் பசுக்கள் 30கிலோவுக்கும் அதிகமாகப் பால் கொடுக்கக் கூடியவை என்ற எண்ணத்தை வளர்த்து வந்தனர். உண்மையில் அந்த எண்ணம் தவறு என்பது புலனாகிறது. கங்கா போன்ற வெற்றிக் கதைகள் குறைந்து வருகின்றன. மிக அதிக அளவில் செலவு செய்து பராமரிக்க வேண்டியுள்ள அன்னியப் பசுக்களின் சராசரி பால் தரும் திறன் குறைந்து இப்பொழுது அது 6.62 கிலோவில் இருக்கிறது.

இஸ்ரேலுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்; நாற்பதே ஆண்டுகளில், பால்பண்ணைக்காக ஏங்கிவந்த இஸ்ரேல், தனது ஃப்ரீசியன் கலப்பு மாட்டினத்தை வளர்த்து அதன்மூலம் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 20கிலோ பால் பெற்று வந்தது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மிக அதிகச் செலவில் இஸ்ரேல் அளவில் இந்தியா 25 விழுக்காடு பாலே பெற முடிந்தது. இருப்பினும் அரசு இதே கொள்கையைப் பின்பற்ற முயல்கிறது. அவர்களது வாதத்தின்படி அத்தகு 25 விழுக்காடே, நமது நாட்டுப் பசுக்கள்தரும் பாலைகாட்டிலும் மூன்று பங்கு அதிகம் ஆகும் என்பதே.-சராசரி 2.2கிலோவே நமது பசுக்களின் திறன்.
இந்த அர்த்தமற்ற வாதம் கூட உண்மையாயிருப்பின் நல்லதே. உண்மை வேறாக உள்ளது. நமது பார்வையின் குறைபாடு என்னவெனில், அன்னியப் பசுக்களின் தரத்தை மிகைப்படுத்திக் கூறுவதும், உள்ளூர் பசுக்களின் தரத்தை மிகக் குறைந்த அளவில் மதிப்பீடு செய்வதே ஆகும்.  

நமது நாட்டின் சுற்றுச் சூழல் வழி வழி வந்த மரபின் ஒரு அங்கமே நமது உள்ளூர் பசுவினம்; அதை வளர்த்தல், பராமரித்தல் போன்றவை. பழங்காலம்தொட்டே, நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில், அவ்வப்பகுதியின் தட்ப வெட்ப நிலை, உணவுத் தேவை, பால் கொடுக்கும் திறன், வரட்சிக்கால நிலை, சீதோஷ்ண நிலையைத் தழுவிக்கொள்ளும் பாங்கு ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு இனப் பசுக்களை ஆய்ந்தறிந்து, ஈன்று, வளர்த்து, மேம்படச்செய்யும் ஆற்றலை வளர்த்திருந்தோம். இத்தகு மேம்பட்ட இனத்தை, பொறுமையாக, அறிவு, அறிவியல் பூர்வமாக, கருத்தோடும், கவலையோடும் அந்த அந்தப் பகுதிகளில் வளர்த்துப் பராமரித்து வந்தோம்.     
நாளடைவில்,இத்தகு கட்டுப்பாடு தகர்ந்தது. வரம்பற்றவகையில், பசுக்களை இனம்மாறி, தரம் மாறி, கருவடையச் செய்து, பசுவினத்தின் தூய்மையைக் கெடுத்தோம். இத்தகு பசுவினமே நமது மொத்தப் பசுக்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காடு  என்பது வேதனை தரும் நிலை. கடந்த 65 ஆண்டுகளில் எப்பொழுதுமே அரசுகள், நாம் பாடுபட்டுக் கண்டுபிடித்த முறையைப் பேணிக்காக்க முயற்ச்சிக்காது, தவறி விட்டன.
இந்த நிலையும் நமது நாட்டுப் பசுவினத்தைப் பற்றிய முழுநிலைமையைக் காட்டவில்லை. இந்தியாவில் 37 வகை தூய்மையான, வளமையான, வளம் மிக்க பசுவினங்கள் உள்ளன. இவற்றில் ஐந்து: ஸாஹிவால், கிர், சிகப்புச் சிந்து, தர்பார்கர், ரதி ஆகியவை ஆகும். இவை மிக அதிகமான அளவில் பால் ஈனும் பெருமையில் சிறந்த இனங்களாகும்.. காங்க்ரெஜ், ஒங்கோல், ஹரியானா போன்ற மற்றசில இனங்கள், இருவகை இனத்தைச் சார்ந்தவை-அவை பால் கறக்கவும் பயன்படும்; விவசாய உழுதலுக்கும் பயன்படும் வகையைச் சார்ந்தவை. மற்ற மாட்டினங்கள் விவசாயத்திற்கு மாத்திரம் பயன் படுவன.
நிருவாகத்தின் கணக்குப்படி, சராசரி 2.2 கிலோ பால் தருவது என்பது எல்லாப் பசுவினங்களையும் கணக்கில் எடுத்துச் சராசரி அளவு எடுத்துக் கொடுத்தது ஆகும். இந்த முறையில் பால் மாடுகளின் ஒட்டு மொத்தத் திறனை மாத்திரம்  கணக்கில்  எடுக்காததால், நம் உள்ளூர் பசுக்களின் பாலீனும் திறனைக் குறைத்து மதிப்பீடு செய்ததாகும். அந்நியப் பசுக்களைப் பெருமிதப் படுத்துதற்காக இம்முறையில், உள்ளூர் பசுக்களைத் தரம் குறைத்து மதிப்பீடு செய்திருக்கிறோம்.
நாளாவட்டத்தில், அந்நியப் பசுக்களை உயர்த்துவதற்காக, உள்ளூர் பசுக்களைக் குறைத்து மதிக்கும் வழக்கத்தைக் கையாள்கிறோம். இந்த தவறன அணுகுமுறையால், உள்ளூர் பசுக்கள் அரிதாகி விட்டன. சிறு வயதிலேயே பால் சுறக்கும் அன்னியப் பசுக்களைக் கண்டு நடுத்தர பால் விவசாயிகள், ஈர்க்கப் படுகின்றனர்.; ஆனால் இத்தகு பசுவினம் சிறிது காலத்திற்குள்ளேயே சக்தி இழந்து விடுகின்றன. இத்தகு கருத்தை வெளியிட்டவர் பெயரை வெளிப்படுத்ட விரும்பாத ஓர் அரசு அதிகாரி ஆவார்.
இக்கருத்தை ஏற்ற ஒரு மும்பாய் கால்நடை மருத்துவர் வேதனையோடு சொல்லுகிறார்: நடைமுறை உண்மைகளைக் கண்டறியாது, இக்கட்டுகளை ஆய்வு செய்யாது பசுக்கள் மிகக் குறைந்த அளவில் பால் கொடுக்கின்றன என்று, பசுக்களின் மேல் குற்றம் காண்கிறோம். பிறகு இந்தப் பசுக்களுக்குப் பதிலாக, அன்னியப் பசுக்களைக் கொண்டு வருகிறோம். அவற்றுக்கும் நம் பசுக்களுக்குள்ள எல்லாக் கஷ்டங்களும், இக்கட்டுக்களும்  உள்ளன. அதே நேரத்தில் நமது உள்ளூர் பசுக்கள் வெளிநாடுகளில் நல்ல பயன்களைத்தருகின்றன!.   .     .          ப்ரேசிலின் ‘கிர்அதிசயமான “க்விம்பண்டா கால்மாத்திரம் அல்ல; தகுந்த பாதுகாப்போடும், பராமரிப்போடும் நமது நாட்டுப் பசுக்கள் மிக நன்றாகப் பயன்படும் என்பதற்கு இது ஒரு சான்று. நமது நாட்டிலேயே இன்னும் எத்தனையோ சான்றுகள் உள்ளன.
எடுத்டுக்காட்டாக, குஜராத்தில் ஜார்டன் என்ற ஊரில் சத்யஜித் கச்சார் என்பவர் ஒரு ‘கிர்பண்ணை வைத்திருக்கிறார். அவர் ப்ரேசிலுக்கு பசுக்களை ஏற்றுமதியும் செய்து வருகிறார். அவருடைய உயர்ந்த பசு ஒரு நாளைக்கு 30 கிலோவிற்கும் அதிகமாகப் பால் தருகிறது; அவருடைய பண்ணைப் பசுக்களின் சராசரி பால் சேமிப்பு 18 முதல் 20 கிலோ ஆகும். கச்சாரினுடைய பண்ணை ஒரு வியத்தற்குரிய விதிவிலக்கு அன்று. அரசினுடைய மத்திய பசுப் பதிவுத் திட்டத்தின் ஆவணங்களின்படி, ஒரு நாளைக்கு 10 முதல் 14 கிலோவரைக்கும் பால் தரும் பசுக்கள் நிறைய இருக்கின்றன. ராஜச்தானில், பிகனேர், கங்கா நகர் மாவட்டங்களில் பத்து கிராமங்களில் “உர்முல் ட்ரஸ்ட் என்ற அமைப்பு, “ரதிப் பசுஎன்ற உள்ளூர் பசு இனத்தை ஆதரித்து வளர்த்து வருகிறது.
அவற்றுள் மிக நல்ல பசுக்கள் 25 கிலோ பாலையும், மற்ற பசுக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிலோ வரைக்கும் பால் தருகின்றன.
எப்படி இத்தகு நம் நாட்டு உள்ளூர் பசுக்களைச் சிக்கனமான செலவிலும், பயனுள்ளமுறையிலும் பராமரிக்கலாம் என்று சற்றே கூர்ந்து சிந்தித்திருந்தால் நமது நாடு மிகச்சிறந்த பயன்களை இந்தத்துறையில் பெற்றிருக்கலாம் என்பது தெளிவாய்த் தெரிகிறது. அயல் நாட்டுப் பசுக்களைப் பயன்படுத்தத் தொடங்கி ஐம்பது ஆண்டு காலம் சென்ற பிறகும், அவற்றைப் பராமரிக்கும் செலவு, விளைவுகள் என்ன என்பது பற்றி தெளிவான, ஒப்பிடும்படியான விவரங்கள் அரசு நிருவனங்களிலும், நம்மிடமும் இல்லையென்பது அதிர்ச்சியளிக்கிறது. 2012ஆம் ஆண்டில்தான் மத்திய கால்நடைப் பராமரிப்பு வாரியம் இறுதியாக, கர்னால்  தேசிய பால்பண்ணை ஆய்வு மையத்திடம் இரண்டு ஆண்டுகால பால் உற்பத்தியைப் பற்றிய முழுமையான ஆய்வுத் திட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது..

பல ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய ஆய்வினை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். நமது நாட்டு உள்ளூர் பசுக்களைப் புறக்கணித்து, அயல் நாட்டுப் பசுக்களை மேம்படுத்த ஏற்ற முயற்சிகளின் முட்டாள்தனத்தை உணர்ந்திருப்போம். உத்திரப் பிரதேசத்தில் உள்ள கெளதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள அம்மோ என்ற சிறு விவசாயியின் அனுபவம் இதைத்தான் உணர்த்துகிறது. ஒவ்வொன்றும் 70000 விலையுள்ள இரண்டு அயல் நாட்டுப் பசுக்களை அந்த அம்மையார் அண்மையில் இழந்தார். அந்த மாடுகளின் கால், வாய் நோய்களின் சிகிச்சைக்காக 5000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவழித்தர்ர். அவள் அடுத்த வீட்டில், 7000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு அமெரிக்கப் பசு தாம்புக்கயிற்றால் கட்டப்பட்டு நின்றிருந்தது. அதனுடைய பழைய சொந்தக்காரர் அந்தப் பசுவிடமிருந்து ஒரு சொட்டுப் பால்கூடப் பெறவில்லை. அதன் தற்போதைய சொந்தக்காரர் திரு ஷீஷ் பால் “ ஏதோ ஒரு அதிசயத்தால் உள்ளூர்க் காளை ஒன்றின் உதவியோடு இந்த அமெரிக்கப் பசு பால் கொடுக்குமோ என்று நம்பிக் காத்திருக்கிறேன்என்று அந்தப் பசுவை வாங்கிய காரணத்தைக் கூறுகிறார்!
அம்மோ, ஷீஷ் ஆகியவர்களது இத்தகு அனுபவங்கள், அயல் நாட்டுப் பசுக்களின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவற்றின் பராமரிப்புச்செலவு மிக மிக அதிகம்; அதற்குத் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை. செலவும், இந்நாட்டு நோய்களுக்கு ஈடுகொடுக்கும் நிலையில் இல்லாமையும் ஒரு பகுதியே ஆகும்; நாட்டுப் பசுக்களைக் காட்டிலும் அந்நியப் பசுக்கள் உயர்ந்தவை என்பதைக் காட்டுவதற்காக காட்டப்படும் புள்ளி விவரங்கள் தவறான அடிப்படையில் கணக்கிடப்பட்டவை.
சரியாகப் பராமரிக்கப்பட்டால் அன்னியப் பசுக்கள் ஒரு நாளைக்கு 30 கிலோவிற்கு அதிகமாகப் பால் கொடுக்கிறது என்பது உண்மையே. ஆனால் நமது நாட்டுச் சூழ்நிலையில் சராசரி பால் சுறப்பது 6.63 கிலோவாகவே இருந்து வருகிறது; காரணம் பராமரிக்கத் தேவையான பொருள் வசதியற்ற நமது விவசாயிகளினால் அப்பசுக்களின் முழுச் சக்தியையும் பெறமுடியவில்லை என்பது தெளிவு. இந்த நிலையில், செலவு குறைவாக இருக்கும் நமது நாட்டுப் பசுக்களிலிருந்து 8 முதல் 20  கிலோ வரை நம்மால் பெற முடிவது மேலல்லவா? அயல் நாட்டுப் பசுக்கள் ஆண்டிற்கு 4500 கிலோ பல் தரவல்லது என்பது உண்மையே; சாதாரண வீட்டுச் சூழ்நிலையில் நமது நாட்டுப் பசு ஆண்டிற்கு 2500 கிலோ பால் சுறப்பதைத் தாண்டுவதில்லை என்ப்து சரியே. ஆனால் அன்னியப் பசு தன் வாழ்நாளில் நான்கு முறைக்குமேல் பால் அளிப்பதில்லை. நமது நாட்டுப் பசுக்கள் தன் காலத்தில் பத்து முதல் பனிரண்டு முறை வரை பால் அளிக்கிறது; அதாவது அதன் வாழும் காலத்தில் நமது உள்ளூர்ப் பசுக்கள் 25000 முதல் 30000 கிலோவரை பால் கொடுக்கின்றன; அந்நியப் பசுக்கள் தருவது 18000 கிலோ பால் மட்டுமே!

துரதிருஷ்டவசமாக, அரசின் தவறான கொள்கைகளினால் நமது உள்ளூர் பசுக்கள் கிடைப்பதில்லை. நமது நாட்டுப் பசுக்களின் முடிவை நெருங்கி வருகிறோம். நமது அசட்டையின் காரணமாக நம்மூர் பசுக்களைக் குறித்த நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள் கூடச் சேமிக்கப் படவில்லை என்று வேதனைப் படுகிறார் திருமதி சோசம்மா ஐப் என்ற பேராசிரியர். இவர் கேரள வேளாண் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர்; உலகிலேயே மிகக்குறைவான செலவில் வளரும் குட்டையான வேச்சூர் இனப் பசுவினத்தைப் புதுப்பித்தவர். அஆதாரபூர்வமான அரசுப் புள்ளிவிவரங்கள் இல்லாமை என்பது அதிர்ச்சியளிக்கும் நிலை. இருக்கும் ஆதரங்களின் அடிப்படையில் நிதர்சனமாகப் புலப்படுவது ‘கிர்இனப் பசுக்களைத்தவிர மற்ற நாட்டுப் பசுக்கள் மறைந்து, அழிந்து போகும் நிலையில் உள்ளன என்பதே.
எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசத்தில் 18லட்சம் அந்நியப் பசுக்களும்,14 லட்சம் நாட்டுப் பசுக்களும் இருக்கின்றன. இதில் பத்து லட்சத்திற்குச் சிறிது மேலாக இருக்கும் நம் நாட்டுப் பசுக்கள் உள்ளூர் ‘ஹரியானாரகத்தைச் சார்ந்தவை. விளக்கமளிக்க முடியாத வகையில் 1,51,000 சாஹிவால்இனத்தையும், 75000 ராஜஸ்தான் மானில, வலிமையுள்ள பாலைவன பால்தரும் இனத்தைச் சார்ந்த ‘தர்பார்கர்இனத்தைச் சார்ந்த நம் உள்நாட்டுப் பசுக்களும் இருப்பதாக அரசு அறிவிக்கிறது.       .    .     .    .   .
இது கற்பனை எண்ணிக்கை என்று ஒரு மேற்கு உ.பி.மாவட்ட கால்நடை அதிகாரி இந்த எண்ணிக்கையை ஏற்க மறுக்கிறார். எங்களிடம் பஞ்சாப் மானிலத்தைச் சார்ந்த உயர்ரக பால் மாடுகளான ‘சாஹிவால்உள்ளன-ஆனால் ஒன்றரை லட்சமா?!
இந்தப் பகுதியி ஒரு தர்பார்கர் இனப் பசுவைக் காட்டினால், அதனுடைய சொந்தக்காரருக்கு எனது செலவில் விழா எடுத்துப் பாராட்டுவேன்”  என்கிறார்.

சிகப்புச் சிந்தி, சாஹிவால்,தர்பார்க்கர் போன்ற நம் நாட்டு உயர்ரகப் பசு இனங்கள் மறைந்து வரும் பொழுது அவ்விடத்தை நிரப்ப எந்த அந்நிய வகைப் பசுவினமும் இங்கு இல்லை. என் டி ஆர் ஐ யிலிருந்து கரன் ஃப்ரைஸ் கரன் ஸ்விஸ் இன வகைகளின் பால் கொடுக்கும் திறன் பற்றிய வினாக்களுக்கு எந்த விடையும் இல்லை. 1965லிருந்து விருத்தி செய்யப்படுவதாகக் கூறப்படும் ‘ஸுனந்தினி யின் வெற்றியைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருப்பது நமது வேதனையையும், வியப்பையும் ஏற்- -படுத்துகிறது.

முனைவர் ஐப்குறுக்குக் கருத்தரிக்கும்வகை மாடுகள் பொதுவாக வெற்றிகரமாக இருப்பதில்லைஎன்று கூறுகிறார். “இதுவரை, எந்த அயல் நாட்டு வகைப் பசுக்களும் நிலைத்து நிற்கவில்லை. இண்ட இறக்குமதியும், அந்நியப் பசுக்களைப் பயன்படுத்துவதும் இருக்கும் வரை, நிலையான இனப்பசுக்களைக் எதிர்பார்ப்பது முடியாதுஎன்கிறார்

இந்த அளவிற்கு நிலைமை சீரழிந்து போயிருக்கத் தேவை இல்லை. 1965 ல் ஒரு உயர்மட்டக் குழுவை கால்நடை வளர்ப்புக் கொள்கையை உருவாக்கிகொடுக்க வேண்டிய பொழுது, அந்தக் குழு அறிவியல் ரீதியில், வலிமையான, பன்முக வழிகாட்டியாக சில வழிமுறைகளைக் கூறினர்; அந்த அந்தப் பகுதிக்கேற்ற, தரமான உள்ளூர் பசு இனங்களை வளர்த்தல்: அவற்றைப் பயன் படுத்தி உயர் ரக இனங்களை வளம்பெறச்செய்வது; நகர்புறங்களில் (அதிகச் செலவு செய்து பராமரிக்கும் வளமை படைத்தவர்கள் அதிகம் இருப்பதினால்)  இனந்தெரியாத மாடுகளை அயல்நாட்டு விந்தினைப் பயன் படுத்திக் குறுக்கு கருத்தரிக்கச் செய்யும் முறையைக் கடைப்பிடித்தல் போன்ற வழிமுறைகளைக் கூறினர்.,  
இந்த கொள்கையின்படி அயல்நாட்டுப் பசுக்களின் விந்துகள் மூலம் உள்நாட்டுப் பசுக்களைக் கருத்தரிக்கச் செய்வது நமது கறவை மாடுகளுக்கு நல்லதல்ல என்பதே ஆகும். அவ்வாறே நமது பால்பண்ணை விவசாயிகளும் கருதினர். திரு வெர்கீஸ் குரியன் தலைமையில் என் டீ டீ பி நிறுவப்பட்டபொழுது, குஜராத் ‘கிர்இனத்தின் பெருமை உணர்ந்த பாதுகாவலர்கள் பல ஆண்டுகளுக்கு அயல்நாட்டுப் பசுக்களின் வருகையை எதிர்த்து வந்தனர். அவர்கள் தமது எதிர்ப்பினை காட்டும் வகையில் திரு குரியன் அவரது மகள் திருமணத்திற்கு ‘டெளரியாகக் கொடுக்கச் சொல்லி அன்னியப் பசுக்களை அவர் வீட்டிற்கு இழுத்துச் சென்று கொடுத்ததாகச் செய்தி!
செயற்கைமுறை கருத்தரிப்பு பிரபலமானதும், வெள்ளக் கதவு திறக்கப் பட்டது. இந்தியாவில் இருக்கும் பல வேதனைகளுள் ஒன்றாக நமது தவறான திட்டங்களின் விளைவே பரவிவரும் பால் நெருக்கடி.
தனது கோட்டையிலேயே, ‘கிர்இனப் பசுக்கள் அயல் நாட்டுப் பசுவினத்தால் ஒதுக்கப் பட்டது என்று, ராஜ்கோட் மாவட்ட 2002-2005 கால குஜராத் அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் 62095  யூனிட் கிர் விந்துக்கள் செயற்கைமுறை கருத்தரித்தலுக்காக பயன்படுத்தப்பட்டது. அந்நியப் பசுக்களின் குறுக்கு கருத்தரித்தல் இதைப்போன்று இரண்டு பங்கு அளவு ஆனது-அதாவது 1,63, 435 ஆகும்.
துவக்கத்திலிருந்தே, பல அபாயமணிகள் ஒலித்தன. துரதிருஷ்ட வசமாக அந்த ஓசையை எவரும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. 1980களில் ஒரு சீசனுக்கு 8000கிலோ பால்
சுறக்கும் ‘ஹோல்ஸ்டெய்ன் ஃப்ரீசியன்ஸ் பசுக்கள் இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பெங்களுரில் வந்து இறங்கியவுடன் அவை உணவு ஏற்க மறுத்தன! எனவே மாட்டுத் தீவனமும் இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. அந்தப் பசுக்கள் பால் சுறக்கத் துவங்கியபோது, கிடைத்த பாலின் அளவு பரிதாபமான 2200 கிலோ மட்டுமே! அதே நேரத்தில் ஒரிஸ்ஸா மாநில கோராபுட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘டேனிஷ் ஜெர்சி மாடுகளொடு அனுபவமும் இப்படியே அமைந்தது.
ஒரு ஓய்வுபெற்ற “ஆபரேஷன் ஃப்ளட்குழுவின் அங்கமாக இருந்த உயர் அதிகாரி கூறியது: “இருப்பினும், மேலை நாட்டில் பயிற்சி பெற்ற கொள்கை வகுக்கும் பெரிய அதிகாரிகள் தமது அந்நியப் பசுவின் மோகத்தை விடமுடியவில்லை”. அடிக்கடி அயல்நாடு செல்லும் வாய்ப்பைப் பெற்ற அதிகாரிகள் அந்நியப் பசுக்கள் வாங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ரேலின் கடின உழைப்பை ஏற்க்க முடியாத இந்தியா, அந்த நாட்டுப் பசுக்களின் வெற்றிக் கதைகளை மாத்திரம் மனத்தில் ஏற்றனர்.; அவற்றை அடைவதில் ஆர்வம் காட்டினர். மிகப் பரந்த இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து சோதனை செய்து பார்த்திருக்கலாம்; ஆனால் நாம் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை.

அத்தகு முட்டாள்தனத்திற்கு நாடு மிகப்பெரிய விலைகொடுக்க வேண்டியிருந்தது. குறுக்கு கருத்தரிகச் செய்வதை மிக கவனத்தோடும், சரியாகவும் செய்ய வேண்டும். இஸ்ரேலைப் போலல்லாது, இந்தியாவில் பசுக்களைப் பற்றிய கருத்தரிக்கும் காலம், எண்ணிக்கை, முறை ஆகியவற்றைப்பற்றிய எந்த விவரங்களையும் தெரிந்து ஆவணப்படுத்த வில்லை. முதல்             தலைமுறை அந்நியப் பசுக்களும், குறுக்குக் கருத்தரித்த உள்ளூர் பசுக்களும் துவக்கத்தில் நல்ல பலனைக் கொடுத்தது; அங்ஙொன்றும் இங்கொன்றுமாக குறுக்குக் கருத்தரிக்கப்பட்டவை அந்தப் பசுவினம் விரைவிலேயே தனது தன்மையை இழந்து, கெடத்துவங்கியது.
இரண்டாண்டுகளுக்கு முன்னர், என் டி டி பி இறுதியாக கணினி மென்கருவியை (ஸாஃப்ட் வேர்) உருவாக்கியது. இன்ஃபர்மேஷன் நெட் வொர்க் ஃபார் அனிமல் ப்ரொடக்டிவிடி அண்ட் ஹெல்த்- (ஐ என் ஏ பி எச்). அதன் உதவியுடன், பசுக்கள், தகுதியான காளைகள் தேர்வு, ஆகியவற்றின் புள்ளிவிவரங்களை ஆவணப்படுத்தப் பயன்படும் முறையில் அமைக்கப் பெற்றது. இதுவரை எட்டு மாநிலங்களிலிருந்து 12 லட்ச மாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆனால் நம் நாட்டிலுள்ள மொத்தக் கால்நடைகளில் இது ஒரு சிறு பகுதியே ஆகும். இந்தத் திட்டத்தின் வெற்றியை இனிமேல்தான் தீர்மானிக்க வேண்டும்.

தவறு வேறெங்கோ உள்ளது. 11 வது ஐந்தாட்டுத் திட்டத்தில், விண்ணெட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், நான்கு கோடி விந்து சேகரிக்க வேண்டும் என்ற இலக்கை ஏற்றது. அதில் ஐந்தில் ஒரு பங்கே உள்ளூரைச் சார்ந்தது! இத்தகு உயர்ந்த இலக்கு விந்தின் தரத்தை எதிலும் கண்டு கொள்ளவில்லை. அந்நிய வர்கத்தின் மேல் அதிக கவனம் வைத்ததால், கருத்தரிக்கும் விகிதம் குறைந்தது. ஆந்திரம், ஹரியானா, உத்தரகண்டம்,மத்தியப் பிரதேச ‘நபார்ட்அறிக்கைப்படி 11ஆம் திட்டத்தில், இந்தியாவின் ஒட்டு மொத்த கருத்தரிக்கும் விகிதம் 35 சதவிகிதம்; அகில உலக விகிதம் 50 சதவிகிதம் ஆகும்.

துவக்கத்தில் இருந்த நூறு காளைமாடுகளின் மூலம் அதிக அளவு இனப்பெருக்கத்திற்காக பயன் படுத்தப்பட்ட ‘ஹோல்ஸ்டைன் ஃப்ரீசியன் விந்துக்களால், கருத்தரித்தல் வலிமையற்றதாகியது. வெப்ப மண்டல நிலைமையாலும் கருத்தரித்தலைக் கடினமாக்கி, கருமுனைச் சாவும் அதிகரித்தது.

2011ஆம் ஆண்டில் வெளியான “உழவர் மன்ற’  இதழில் டாக்டர் தண்டா, டாக்டர் கே எம் எல் பாதக் ஆகியோர் குறுக்குக் கருத்தரித்தலினால் ஏற்படக்கூடிய பயன்கர விளைவுகளைப் பற்றி எச்சரித்திருந்தனர். இனவிருத்தி உறுப்புக்களின் நோய்கள், விந்து வெளிப்ப்டுதலில் ஏற்படும் குறைபாடுகள், விந்து உறைதலில் குறைபாடுகள் போன்றவை  காளைகளில் மிக அதிக அளவு ஏற்படும் நிலையுண்டாகும் என்பது எச்சரிக்கையில் அடங்கும்.

இது அச்சத்தை ஏற்படுத்துபவரது குரல் அல்ல. டாக்டர் தண்டா ஐ சி ஏ ஆர் நிருவனத்தின் மிருக அறிவியல் துறையில் உதவி டைரெக்டர் ஜெனரலாகப் பணி புரிந்தவர்..டாக்டர் பாதக் அவர்கள் தற்பொழுது அதே பொறுப்பில் இருப்பவர்.
இந்தியாவிற்கு அந்நியப்பசுக்கள்- குறுக்கு-கருத்தரிக்கும் மாடுகள்- உகந்ததல்ல என்பதற்கு வேறு காரணங்களும் உள்ளன.கால்நடை மருத்துவரும், ஆந்திர மாநில  ஹைதராபாத்தின் அரசு சாரா நிருவனத்தின் இயக்குனருமான டாக்டர் ஸ்கன் ராம்தாஸ் கருத்துப்படி ஒடு சாதாரண அன்னியப் பசுவிற்கு நம் உள்ளூர் பசுவின் குடிநீர் தேவையைப்போல நான்கு மடங்கு தேவைப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் இந்த அந்நியப் பசுக்களின் தேவைக்காக தண்ணிரை ஆழத் தோண்டி எடுக்க வேண்டிய நிலை; ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது.
அழிந்துவிடுமோ என்ற அச்சம் அர்த்தமற்றதல்ல. நமது நாட்டின் அன்னிய நாட்டு விந்துக்களுக்காகப் படும் பாடும், ஓடும் ஓட்டமும் மற்ற இன்னல்களுக்கும் இழுத்துச் செல்கிறது. இயற்கையாக கருத்தரிக்கச் செய்வதற்கு நம் உள்ளூர் தரமான காளைகள் மிகச் சிலவே இருக்கின்றன. சீதோஷ்ண மாற்றத்தினாலோ, தொற்றுநோய் பற்றிக்கொண்டாலோ, நமது நாட்டில் தடுமாறிவரும் அன்னிய மாடுகள் எதிர்காலத்தில் குறைந்து,, உள்நாட்டுக் காளைகளின் விந்துக்களுக்காக அலையும் நிலை ஏற்படும்; அதற்கு முன் ஒரு பத்தாண்டுகளில், முழுமையான நமது நாட்டு உள்ளூர் மாடுகள் மறைந்தே போயிருக்கும்.
அயல்நாட்டு மாடுகளுக்காக நமது மாற்று எண்ணங்கள், உள்ளூர் பால் மாடுகளை மட்டுமின்றி, உழவு மாடுகளையும் பாதித்துள்ளது. கிராமப் பொருளாதாரத்தில், வண்டி இழுக்கும் மாடுகளைப் பயன்படுத்தி ஏற்பட இருக்கும் வேலை வாய்ப்புக்களைப் பற்றி, ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம், அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆனால் கேரளா போன்ற பல மாநிலங்கள் வலிவான உழவு மாடுகளைத் துடைத்துத் தொலைத்து விட்டன.

அன்னிய  காளைமாடுகளின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. இந்திய தட்பவெட்ப நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத அயல்நாட்டு மாடுகள் உழவுமாடுகளாக பயனற்றுப் போயின. கருத்தரிக்கப் பயன்படும் காளைகள் என்று கண்டறியப்படாத காளைகள் உடனெ கொல்லப் படுகின்றன அல்லது பசியால் வாடி இறக்கின்றன. அதைத் தவிர்த்துவிடும் காளைகள், சட்டத்திற்கு மாறாக, இறைச்சிக்காக நம் நாட்டிலோ . வெளிநாட்டிற்கோ கொலைக்களத்திற்கு அனுப்பப் படுகின்றன! இந்திய மாட்டிறைச்சி வியாபாரம் ஆண்டிற்கு 6000 முதல் பத்தாயிரம் கோடி அளவில் இருக்கிறது. பலனற்ற பசுவதைத்தடுப்புமுறை அரசிற்கு வருவாயையும் குறைத்து, பசுக்களின் தாங்கவொணா அவஸ்தைகளையுமே வளர்த்துள்ளது எனப் பலர் கருதுகின்றனர். பசுக்களை ஒறிடத்தினின்று மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும்பொழுது அவை படும் துயரங்கள் ஏராளம் ஏராளம்.தடையை நீக்கிவிடலாம் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து ஆகும். இந்தியாவின் புனிதப் பசுக்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட வேண்டும் வாயளவிலாவது!

திரு வெர்கீஸ் குரியன் ‘அமுல்நிருவனத்தை நிருவும் பொழுது அபரிமிதமான பால் உற்பத்தி என்ற கொள்கையைவிட, பாலுற்பத்தியில் ஏராளமானோர் கலந்து பயனுற வேண்டும் என்றே நினைத்துச் செயலாற்றினார்.
டாக்டர் ஐப்பின் எச்சரிக்கை: “இந்த நிலையில் பால் உற்பத்தி தொழில்மயம் ஆக்கப்பட்டால், இறுதியில், கிராமப்புற ஏழை சிறு பால் உற்பத்தியாளர்கள், இத்தொழிலிலிருந்தே விலகி விடுவார்கள்என்பது. 2011-12 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஏழைகளுக்கு 12000 ‘ஜெர்ஸிப் பசுக்களையும், எச்எஃப்க்ராஸ் ப்ரீட் காளைகளையும் வழங்கியது. பால் கறக்கும் காலம் முடிந்தவுடன் வீட்டுப் பின்புறக் கொட்டிலில் கட்டப்பட்டிருக்கும் இப்பசுக்களை வைத்து இந்த ‘வெள்ளை யானைகளை; என்ன செய்வார்கள்?
டாக்டர் ராம்தாஸ் அவர்கள் நமது அரசுக் கொள்கைகள் நம்மை தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றன என்று வேதனைப் படுகிறார். ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ப்ராய்லர் கோழிவளர்ப்புத் தொழிலை உலகம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள்னர்; ப்ரேஸிலிலிருந்து மலேசியா வரை- இந்தியாவும் உட்பட. இந்த நிலையை விவசாயத்திலும், மாட்டுப் பண்ணையிலும் அனுமதித்து விட்டால் நமது  விவசாயிகளின் சுதந்திரம் பறிபட்டுப்போகும்.
ஒரு அதிசயிக்கத்தக்க மாற்றம் இப்பொழுதும் நிகழ வாய்ப்புள்ளது. உள்ளூர் நாட்டுப் பசுமாடுகளின் இனத்தைப் பொறுத்த உரிய நேரத்தில் எடுக்கப்படும் கொள்கை மாற்றமும், பொது முதலீடுகளும் நமது அருமையான உயிரியல் பல்வகை மாற்றங்களை புதுப்பித்து, இன்னும் 25-30 ஆண்டுகளுக்க்ள் வளமையைத்தரும்-அதாவது  மூன்று நான்கு கால்நடை தலைமுறைக்குள்ளாவது பயன் தெரியும். இன்றும், நமது உள்ளூர் வளர்ப்புக்கள் இன்னும் நம்முடன் இருக்கின்றன. உறையவைக்கப்பட்ட விந்துக்கள் இருக்கின்றன இதைப்பற்றிய நல்ல் ஞானமுள்ள விவசாயிகள் இருக்கின்றனர் எனக் கூறுகிறார் டாக்டர் ராமதாஸ். மேலும் எச்சரிக்கிறார்: ஒருமுறை நாம் இவற்றை இழந்துவிட்டால் மீண்டும் புதுப்பிப்பது என்பது பல தலைமுறைகளுக்கு முடியாமல் போய்விடும்என்று.
துரதிருஷ்டவசமாக நம்மால் இது முடியும் என்றாலும், அதைப்பற்றி நாம் நினைத்துப் பார்ப்பதைப் போன்ற எந்தச் சைகையும் நம் கண்களில் படவில்லை. ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஜீலந்து ஆகிய நாடுகளுடன் நாம் செய்துகொள்ளும் வணிக ஒப்பந்தங்களும், அவர்களுக்குக் காட்டப்பெறும் வரிச் சலுகைகளும் அவர்களது பண்ணைப் பொருட்கள் நமது சந்தைகளை நிறப்பும் நாள் துலைவில் இல்லை. பால்பண்ணை தொளிலதிபர்கள் இவற்றை வரவேற்று, பால்பவுடர்களையும், கொழுப்பு வெண்ணையையும் பயன்படுத்தி பால்வளத்தைப் பெருக்கலாம் என்று நினைத்தாலும், ஏற்கெனவே திண்டாடிக்கொண்டிருக்கும் நமது சிறு நடுத்தர விவசாயிகள்/வேளாண் மக்கள் மேலும் குறைந்த பால் கொள்முதல் விலையால் துன்புறுவார்கள்.

ஏ1- ஏ2 போட்டி

ஐரோப்பியப் பசுக்களின் பால் ஒரு போதை; மனச்சிதைவு/மூளை நோய், நீரிழிவு. இதய நோய்களை ஏற்படுத்தும்.
ஜூல்ய் 2007ஆம் ஆண்டு நியூஜீலந்து லிங்கன் பல்கலைக்கழகத்தில், வேளாண் நிருவாகத்துறை பேராசிரியர் டாக்டர் கீத் வுட்ஃபோர்ட் என்பவர் “ஏ2 பால், விவசாயிகள் முடிவுகள், ரிஸ்க் நிருவாகம்என்ற தலைப்பில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். அதில் கிட்டத்தட்ட 500 நியூஜீலந்து விவசாயிகள், பாலில் உள்ள ஏ1 பீடா கஸெய்ன்ஐ, பாலிலிருந்து குறைக்கும்படியாகத் தங்களது பசுமாடுகளை மாற்றி வருகின்றனர்; ஏனென்றால், இந்தப் பால் டைப் 1 நீரிழிவு, இதய நோய், மூளை வளர்ச்சியின்மை ஆகிய நோய்களுக்குக் காரணம்என்பதால்.
டாக்டர் வுட்ஒர்ட் மேலும் விளக்குகிறார்: ஏ1 பீடா கெஸைனுக்கு அதைச் சார்ந்த பாலுக்கு மாற்று ஏ2 பால். முன்காலத்தில் எல்லா பசும் பாலுமே ஏ2 வகையைச் சார்ந்ததே. ஆனால் 5000 முதல் 10000 ஆண்டுகளுக்குள்,  ஐரோப்பிய பசுக்கள்-அதாவது  ஏ 1 பீடா கேசைன் அதிகம் கலந்த  பால் தரும் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன. நல்ல ஆசிய, ஆப்பிரிக்கப் பசுக்களில் இது கிடையாது.
அவர் இந்த ஏ1 தீய விளைவுகளைப் பற்றிய எட்டு வகை சாட்சி இழைகளைத் தந்திருக்கிறார்: எந்த எந்த நாடுகளில் ஏ1 பீடா கெசெய்ன் பாலில் அதிகமிருக்கின்றதோ, அந்த் நாடுகளில் டைப்  1 நீரிழிவு நோயும், இருதய நோயும் அதிகமாக உள்ளது; எ1 உம் ஏ2 உம் வெவ்வேறு வழிகளில் சீரணிக்கப் படுவதால் ஏ1 அதிகமாவதால் பல்வகை உடல் நோய் ஏற்படுகின்றன; அமெரிக்க, , ஐரோப்பிய ஆய்வுகள் இதை உறுதியாக்குகின்றன. ஏ2 பால் சாப்பிடுவர்களுக்கு இத்தகைய விளைவுகள் ஏற்படுவதில்லை.
ஏ1 ஏ2 பால் பற்றிய முழு விவரங்கள் உலக முழுமையிலும் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இன்னும் தெரிய வில்லையே என டாக்டர் வுட்ஃபோர்ட் வேதனைப் படுகிறார். நான்கு ஆண்டுகளுக்குள் “நேஷனல் ப்யூரோ ஆஃப் அனிமல் ஜெனிடிக் ரிஸோர்ஸ் தமது ஆய்வு விவரங்களைத் தருகின்றது.
2011ல் இந்தியப் பசுக்களின் பாலில் ஏ2 அணுக்கள் 100 சதவிகிதம் இருக்கிறது என்றும் ஆனால் அயல்நாட்டுப் பசுக்களில் 60 சதவிகிதமே காணப்படுகிறது என்றும் கண்டறிந்திருக்கின்றனர்.
இந்த அமைப்பு இந்திய பசுக்களின் 22 வகைகளிலும், அந்நிய ரக ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன், ஜெர்ஸி ரக மாடுகளிலும் இந்த நிலையைப் பரிசீலித்தது. இது ஐந்துவகை நம் உள்ளூர்க் கறவை மாடுகளில்- சிகப்புச் சிந்தி, ஸாஹிவால், தர்பார்கர், கிர், மற்றும் ரதி ரகங்களில் 100 சதவிகிதமும், மற்ற உள்ளூர் கறவைப் பசுரகங்களிலும், உழவு மாடுகளிலும் 94 சதவிகிதமும் இருப்பதாகவும், அயல்நாட்டு இரு ரகங்களிலும் 60 சதவிகிதமே இருக்கிறது என்பதும் கண்டறிந்த ஆய்வு முடிவுகளாகும்.,

டாக்டர் வுட்ஃபோர்ட் கூற்றுப்படி, ஏ2 பால் பயன்படுத்துவோர் சந்தை ஆஸ்திரேலியாவில் மிகுதி- அதாவது 800 சூபர் மார்கெட்டுகளிலும், 200 மற்ற கடைகளிலும் கிடைக்கிறது.  இருப்பினும் மொத்த புழக்கத்தில் இது ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானதே. விளம்பரம் இல்லாமையே இதற்குக் காரணம். நமது உள்ளூர் மாடுகளின் ஏ2 பாலின் அருமையை உடல்நலம் பற்றிக் கவலைப் படும் எல்லா நாடுகளிலிருந்தும் இந்தப் பாலுக்கு வரவேற்பு உள்ளது.. இப்பொழுது, நமது சிந்தனையை, ஏ1 பாலால்
நமது சந்தை ஆதிக்கமாக்கப் படுவதைத் தடுத்து, அந்நியப் பசுக்களின் இறக்குமதியையும், பால்பண்ணைத் தொழிலை அந்நிய தொழிலதிபர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தலைத் தடுப்பது பற்றியும், திருப்ப வேண்டும்.

இந்தியத் தொழில் உலகம், தமது திட்டங்களையும் , வியூகங்களையும் வகுத்துள்ளது. முந்நாளைய அமுல் அதிகாரி கூறுவதைப்போல: “ இந்தியப் பொருட்களின் விலையைப் பொருத்தமட்டில் குறைவாகவே இருக்கும்; இங்கு தொழிலாளர் சம்பளம் குறைவுதானே. . அன்னியப் பசுக்களை பராமரிக்க முடியாத  நமது வேளாண் மக்களை நமது பண்ணைகளின் வேலைகளைச் செய்வதற்கு அமர்த்திக் கொள்ளலாம். கிராமீய நுகர்வோர்களுக்குப் பெரிய கார்டன்களில் விற்பதைவிட சிறிய பாக்கெட்டுகளில் கொடுத்தால் அதுவெ தேநீர் பருகுவதற்கு உபயோகமாக இருக்கும்
மாறிவரும் இத்தருணத்தில், பாரம்பரிய முறையில் காமதேனுவைக் காப்பாற்ற நினைக்கும் மக்களுக்கு, இதைத்தான் நாம் அளிக்க முடியும்.; அதைத்தான் அவர்கள் பெறவும் முடியும்! 

Source The Desi Cow – Almost Extinct By Jaymazoomdaar Referhttp://tehelka.co m/the-desi-co w-almo st-extinct/?singlepage=1 தமிழாக்கம் என் வி சுப்பராமன்,12/1045, ஜீவன் பீமா நகர்,சென்னை 600101--044/26544950, 9840477552
,         . .                  .        

No comments:

Post a Comment