Thursday, January 31, 2013

பசுவின் பெருமை

வேறு எந்த விலங்கினத்திற்கும் கொடுக்காத பெருமையினை நாம் பசுக்குக் கொடுத்து கோமாதா என அழைத்து போற்றி வணங்கி வழிபடுகிறோம். கோமாதாவைத் தினமும் பூஜிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால் மலடிக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். 

பசுவுக்கு உணவு கொடுத்த பின்னரே நாம் உண்ண வேண்டும். பாற்கடலில் இருந்து காமதேனு தோன்றினாள் அவளது சக்தி இருக்கும் உலகம் கோலோகம் எனப்படும். கிருஷ்ணன் அங்கு கோக்களுடனும் கோபியர்களுடனும் ஆனந்தமாக இருக்கிறார். காமதேணுவின் சந்ததியினரே பூமியின் பசுக்களாக இருக்கிறார்.


அதனை பால், நெய்னால் வேதமந்திரங்கள், கூறி வேதியர் யாகம் வளர்க்கின்றனர். யாகத்தினால் மழையும், மழையினால் உலக சுபிட்சமும் ஏற்படுகிறது. எனவேதான் "கோம்ராம்மணேப்ப சுபமஸ்து நித்யம்'' என்று கூறப்படுகின்றது. பகவான் கோப்ராம்மணாசுதர் எனப்படுகிறார். கோவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் வாநவியஸ்நானம் செய்த பலன் கிட்டும். கோதுளிபட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய வைசிகன் சண்டாளனாகப் பிறந்தான் கோவுக்குப் பணிவிடை செய்து திலிப் மகாராஜன் ரகுவைப் பெற்றான்.


மிருகங்களில் பசு மட்டுமே தனக்கென வாழாத மிக உயர்ந்த பிறவியாகும். இது மனிதர்களுக்குப் பால் என்னும் சிறந்த சத்து பொருளை அளித்து மனிதன் உண்டபின் அவன் கழிவாக ஒதுக்கும் வைக்கோல், தவிடு, முதவியவைகளை மட்டுமே ஏற்கும் உயர்ந்த பண்பினை உடையது. பசுவின் பாலைப் போன்ற புனித பொருள் வேறு எதுவும் கிடையாது. இதனை நமக்கு வழங்கும் பசு நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.


குணத்திலும் இதனைப்போன்ற சாந்த குணம் கொணட பிறவி கிடையாது. இதன் சீரிய பண்பினை உணர்ந்தே நம் முன்னோர் தனக்கென வாழாது பிறருக்கென்ன வாழும் தியாகப்பண்புடைய பசுவை வணங்கி, அப்பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று அதனை வணங்கி அத்தகு தியாகப் பண்பைப் பெற்றனர். தான் சார்ந்த சமூகத்திற்கு அனைத்தையும் கொடுத்துவிட்டு தனக்கென எதையும் பெற விரும்பாத உயர்ந்த பண்பைப் பெற்றனர். இதனாலேயே கோபூஜை செய்தனர்.


அதிதி இல்லாத நாளில் பசுவுக்கு அன்னம் வேண்டும். கோதானத்தை விடச் சிறந்த தானம் எதுவும் கிடையாது. எனவேதான் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் கோதானம் செய்வதை நம் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. கோதானம் கொடுக்கும்போது பசுவின் வாலை உருவியே தானம் கொடுக்க வேண்டும்.


தினமும் பூஜை செய்து முடிந்த பின் கபில பூஜை செய்து அதன்பின் ஆலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.பசுவை வணங்கி வலம் வந்தால் எல்லாப் பாவங்களும் விலகும் ஏழு தீவுகளையும் வலம் வந்த புண்ணியமும் சர்வ பீஸ்டமும் உண்டாகும். பசுவை வலம் வந்தால் பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டும்.


காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தினமும் தரிசிப்பவன் துன்பங்கள் நீங்கி சுபத்தைப் பெறுகிறான். பசுவையும் கன்றையும் வலம் வருபவன் பூப்பிரதட்சணம் செய்த பலன் பெறுவான் தினமும் கோ பூஜை செய்பவன் கோபாலனின் திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைகிறான். பசுக்களுக்குத் தினமும் உணவு தருபவனுக்கு இறைவன் அவன் விரும்பிய வரங்களை அளிக்கிறான்.


காமதேனுவின் வாரிசு யார்........


காமதேனு பாற்கடலில் இருந்து தோன்றியது காமதேனுவின் சந்ததிகளே பூலோகத்தில் பசுக்களாக இருக்கின்றன. பசு காமதேனுவின் அம்சம் பசுவின் ஒவ்வொரு பாகமும் மனிதர்களுக்குப் பேருபகாரம் செய்கின்றது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எனப்பல வகையிலும் உதவுகின்றது. பசுவின் பாலும் நெய்யும் யாகம் செய்யவும் அபிஷேகத்திற்கும் பயன்படுகின்றன. உடல் நலத்திற்கு அத்யாவசியமான பால், தயிர் நெய் போன்றவற்றை வழங்கும் கோவை (பசுவின்) தாயாக பாவித்து கோமாதா என்கிறோம்.

Thanks to Sasithara Sarma

Sourcehttp://aanmikam.blogspot.in/

Wednesday, January 30, 2013

விவசாயிகளைப் பாதுகாப்போம்


விவசாயிகளைப் பாதுகாப்போம்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.
என்பார் திருவள்ளுவர். இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ வேண்டுமானால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் பொலிவுடன் விளங்கியாக வேண்டும். விவசாயமே உலகின் ஆதித் தொழில். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையாத தேசங்களில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைக் காண்கிறோம். எனவே விவசாயம் நாட்டின் ஆணிவேர் ஆகிறது. விவசாயம் சார்ந்ததாக இருந்ததால் தான், ‘’கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு’’ என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், நமது நாட்டின் விவசாயம் தற்போது என்ன நிலையில் இருக்கிறது?
மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்ப்பா பகுதியில் மட்டுமே வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பலநூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கிறது. இத்தனைக்கும் இந்த விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு சந்தையில் கிராக்கி. எங்கோ தவறு நடப்பதை இந்த விவசாயிகளின் தற்கொலைகள் காட்டுகின்றன.
பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் புன்னகையுடன் பத்திரிகைகளில் ‘போஸ்’ தருகிறார்கள். அடுத்தவர் பணத்தை மோசடி செய்து வயிறு வளர்க்கும் நிதி மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் புன்னகையுடன் காவலர்கள் சூழ உலா வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கூட வழக்குரைஞர் வைத்து வாதாடுகிறார்- தான் தவறிழைக்கவில்லை என. ஆனால், சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் இதே காலகட்டத்தில் நமது நாட்டில் தான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்கிறது, ஈரோடு சு.சண்முகவேல் எழுதியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்போம் என்ற இந்தப் புத்தகம்.
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போன்ற தன்மானத்துடன் வாழப் பழகிவிட்ட, சொந்தக் காலில் நின்று பழகிப்போன உழவர்கள், தாங்கள் இத்தனை காலம் நம்பிவந்த விவசாயம் தங்களைக் கைவிட்டு விடுவதைத் தாள முடியாமல் தான் இறுதி முடிவு எடுக்கிறார்கள். அவர்களை மீள முடியாத விஷச் சூழலில் தள்ளிவிடுகிறது வட்டியும், கடனும்.

விவசாயம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது என்பது தான் முக்கியமான சிக்கல். இதற்கு விவசாயத்தை திட்டமிட்ட முறையில் அணுகாத விவசாயிகளும் ஒரு காரணம். விவசாயிகளை இந்த விஷச் சூழலில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசும் ஒரு காரணம். மொத்தத்தில் இப்போதுள்ள விவசாய முறையே விவசாயிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதைக் காண்கிறோம். இந்த நிலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பது எப்படி?
விவசாயிகளைப் பாதுகாப்பது ஏன் முக்கியமாகிறது? ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தில் சரிபாதிக்கு மேல் பங்களிப்பது விவசாயம் தான். நாட்டு மக்களுக்கு பசியாற உணவளிப்பது விவசாயம் தான். நாட்டு மக்கள் தொகை 130 கோடியாகிவிட்ட சூழலில், இன்றும் 60 சதவீதம் பேருக்கு வேலை அளிப்பது விவசாயமே. நாட்டின் ஊரக, கிராமப் புறங்களை இன்றும் வாழச் செய்வது விவசாயமே. விவசாயம் குலையுமானால், நாட்டின் சட்டம் ஒழுங்கும் சீர்குலையும். பஞ்சம் தாண்டவமாடும். தேசிய ஒருமைப்பாடும் கானல்நீராகும். இவை வெறும் கற்பனை மிரட்டல்கள் அல்ல. ஆப்பிரிக்காவில் விவசாயம் நொடிந்ததால் தத்தளிக்கும் தேசங்கள் பல. ஒருகாலத்தில் பொன்னுலகாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் கூட விவசாயிகளின் வீழ்ச்சியால் தான் ஏற்பட்டது. தொழில்மயமாதலுக்கு விவசாயத்தை ஒப்புக் கொடுத்த ரஷ்ய சர்வாதிகாரிகளின் கொடுங்கோன்மையால், 1990களில் ரஷ்யாவில் கடும் உணவுப்பஞ்சமும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவும் நேரிட்டன. இவை சமீபகால சரித்திரங்கள்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் தெரியாமல் அந்தக் குறளை (104-1) சொல்லி விடவில்லை. அதனால் தான் விவசாயத்தைக் காத்தாக வேண்டியுள்ளது. அதற்கு, விவசாயத்தை குலத்தொழிலாகக் கொண்ட விவசாயிகளைக் காத்தாக வேண்டும். அதற்கு விவசாயம் தற்போது சந்திக்கும் சிரமங்களைக் கண்டறிந்தாக வேண்டும். ”நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்பதும் திருவள்ளுவர் கூறிய இலக்கணம் அல்லவா?
அந்த அடிப்படையில் தான் இந்த நூலை எழுதி இருக்கிறார் சு.சண்முகவேல். அடிப்படையில் அவர் ஒரு விவசாயி. தற்போது ஈரோட்டில் பதிப்புத் துறையில் பணிபுரிந்தாலும், அவரது மனம் ஒட்டன்சத்திரம் – கன்னிவாடி அருகில் உள்ள தனது குக்கிராமத்தில் இருக்கும் விவசாய நிலம் மீதே செல்கிறது. வானம் பார்த்து செய்யும் சாகுபடி, விளைச்சல் தந்தாலும் வீட்டு அலமாரியை நிறைப்பதில்லை என்ற உண்மையை சிறுவயது முதலே அவர் கண்டு வந்திருக்கிறார். அவர் தொழில் மாறியதற்கும் காரணம் இதுதான். எனினும், தனது குலத் தொழிலின் மீட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமே இந்த நூலை எழுதுமாறு அவரைத் தூண்டி இருக்கிறது.
விவசாயத்தின் அடிப்படை இயற்கை. வான்மழை பொய்த்தால் விவசாயம் தாங்காது. அப்படியே தாக்குப் பிடித்தாலும், இறுதியில் கிடைக்கும் விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காவிட்டால் என்ன பயன்? ”காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்?” என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் திரைப்பாடல் இன்றும் பொருத்தமாக இருப்பது நிதர்சனம் அல்லவா? ஆக, விவசாயம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அதன் களச் சிக்கல்கள் தவிர, வர்த்தக சிக்கல்களையும் சரிப்படுத்தியாக வேண்டும். சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
அண்மையில் ஈரோட்டில் கூடிய மஞ்சள் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளுக்கு குவின்டாலுக்கு ரூ. 9,000 வழங்க வேண்டும் என்று விலை அறிவித்தனர். ஒரு குவின்டால் (100 கிலோ) மஞ்சள் உற்பத்தி செய்ய செலவினமே விவசாயிக்கு ரூ. 6,000க்கு மேல் ஆகிறது. ஆனால், சந்தையிலும் அரசு சார்ந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அதற்கு கிடைக்கும் விலை ரூ. 3,000 முதல் ரூ. 5,000 வரை மட்டுமே. அதே சமயம், மஞ்சள் தூள் விலை கிலோ ரூ. 200 ஆக இருக்கிறது! எனவே தான், தாங்கள் விளைவித்த பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்வோம் என்று களம் இறங்கி இருக்கிறார்கள் விவசாயிகள். இந்தப் போராட்டம் இன்னமும் வெற்றியை முழுமையாக எட்டவில்லை.
ஆந்திரப் பிரதேசத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கட்டுபடியான விலை கிடைக்காததால் பாலை சாலையில் கொட்டினர் என்பது மற்றொரு செய்தி. கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியால் (கிலோ ரூ. 2க்கு கூடப் போகாத நிலைமை!) கொந்தளித்த விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த தக்காளிகளை திரும்பக் கொண்டுசெல்ல மனமின்றி (அதற்கும் செலவாகுமே!) சாலையோரம் கொட்டிச் சென்றனர் என்பது மற்றொரு செய்தி.
விவசாயிகள் ஒரு பொருளை உற்பத்தி செய்ய 24 மணி நேரமும் பாடுபடுகின்றனர். அதற்குத் தேவையான இடுபொருள்களான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகளின் விலை அதிகரித்திருக்கிறது. விவசாயக் கூலியாட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறி இருக்கிறது. இயற்கை வஞ்சித்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை வேறு பாதிக்கிறது. நதிநீர்ப் பிரச்னைகளும் விவசாயிகளுக்குத் தான் சம்மட்டி அடி கொடுக்கின்றன. இத்தனைக்கும் பிறகு விளைபொருளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றால், ஒரு விவசாயி எதற்காகப் பாடுபட வேண்டும்? அரசும் விவசாயிகளைக் கைதூக்கிவிடத் தயாரில்லாதபோது, அவர்கள் விவசாயத்தைக் கடாசிவிட்டு வேறு தொழிலுக்கு மாறுவது நியாயம் தானே?
சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், நம்மால், விளைபொருள்களைப் பாதுகாக்கும் சேமிப்பு, பதனக் கிடங்குகளை மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவிலும்கூட அமைக்க முடியவில்லை. அரசு அளிக்கும் குறைந்தபட்ச ஆதார விலைகளும் கூட எல்லா விளைபொருளுக்கும் கிடைப்பதில்லை. கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயி அடைய வேண்டிய பயன்களை பதுக்கல்காரர்களும், பெரு வர்த்தக நிறுவனங்களுமே அடைகின்றனர். அரசியல்வாதிகள் அவர்களைச் சார்ந்திருப்பதால் விவசாயி கைவிடப்படுகிறான். இந்நிலையை மாற்ற வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர்.
அதற்கான 5 செயல்திட்டங்களையும் சண்முகவேல் இந்நூலில் அளித்திருக்கிறார்.
முதல் செயல் திட்டத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தல், நிலத்தை வரைமுறைப் படுத்துதல், இலக்குகளை நிர்ணயித்தல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தல் ஆகியவை குறித்து விளக்கி இருக்கிறார்.
இரண்டாவது செயல்திட்டத்தில், தகவல் மையங்கள், அரசு விவசாய மையம், அரசு விவசாய வங்கி ஆகியவை குறித்தும் அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் தேவை குறித்தும் விளக்குகிறார்.
மூன்றாவது செயல் திட்டம் பயிர்க்கடன் வழகுவது, அதை வசூலிப்பது, அரசு விவசாய வாகனம் (இது தற்போது குஜராத்தில் உள்ளது; தமிழகத்தில் பரீட்சார்த்தமாக பொங்கல் விழா சமயத்தில் நடைமுறையானது) குறித்து அலசுகிறது.
இயற்கை மற்றும் செயற்கைக் காரணங்களால் விவசாயி பாதிக்கப்படும்போது அவனைக் கைதூக்கிவிட ஓர் உறுதியான கரம் தேவை. அதற்கு பயிர்க் காப்பீடு அவசியம். இதில் முறைகேடு நடக்காமல் தடுக்க தகுந்த அமைப்பும் ஆய்வும் அவசியம். இதனை செயல்திட்டம்- 4 விளக்குகிறது.
அடுத்து விளைபொருள்களை சேதமின்றிப் பாதுகாக்கவும், விலை குறையும் தருணங்களில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவும் கிடங்குகளின் தேவை குறித்து விளக்குகிறார். விளைபொருளின் மாற்றுப் பயன்பாடுகளையும் விவசாயிகளே கூட்டுறவு முறையில் மேற்கொள்வதும் (உதாரணம்: தக்காளி ஜாம் தொழிற்சாலை) குறிப்பிடப்படுகிறது. இந்தப் புதிய செயல் திட்டத்தால் அரசுக்கும் லாபம்; மக்களுக்கும் லாபம்; விவசாயிகளுக்கும் லாபம் என்கிறார், நூலாசிரியர். சொல்வது யார்க்கும் எளியதே. எனினும், இதை ஆராயும் கடமை அரசுக்கு அல்லவா இருக்கிறது?
இறுதியாக, ‘விவசாயிகளும் தொலைநோக்கில் சிந்திக்க வேண்டும்; நவீன உத்திகளைக் கையாள வேண்டும்; இயற்கை விவசாய முறைகளுக்குத் திரும்ப வேண்டும்; மாற்று விவசாய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்; விவசாயம் சார்ந்த அரசு நிர்வாக முறையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்- அப்போது தான் நிலையான வேளாண்மை தொடர முடியும்’ என்கிறார்.

மொத்தத்தில், வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் செய்ய வேண்டிய அரும்பணியை இந்நூலாசிரியர் செய்திருக்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார். ”வீழ்ந்து கிடக்கும் விதைகளை மேலெழுப்புவதற்காகவே பெய்யும் மழைத்துளி போல, மாற்றுக்கருத்துக்கள், மாற்றுச் சிந்தனையாளர்களால் இந்த மண்ணை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் என்பதற்கான மெய்யான சான்றே இந்நூல்” என்று தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார் நம்மாழ்வார். இது ஒன்றே போதும் நூலின் சிறப்பை விளக்க.
இதுவல்லாமல், சுதேசி இயக்க மாநிலத் தலைவர்களுள் ஒருவரும் சுதேசி பொருளாதார சிந்தனையாளருமான பேராசிரியர் ப.கனகசபாபதி இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். ‘திருப்பூர் அறம் அறக்கட்டளை’ இந்நூலை சிறப்பாக வெளியிட்டிருக்கிறது. இப்பணியில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்நூலின் துவக்கத்தில் 1870 ம் ஆண்டுகால கடும் பஞ்சக் காட்சிகளை வெளியிட்டு உருவகமாக நம்மை மிரட்டி இருக்கின்றனர் நூல் வெளியீட்டாளர்கள். விவசாயம் காக்கப்படாவிட்டால் கடைசியில் அது தானே நடக்கப் போகிறது?
விவசாயம் புறக்கணிக்கப்பட்ட துறையாக இருப்பதற்கு இத்துறையில் வரும் நூல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே சாட்சி. அந்தக் குறையைப் போக்குவதாகவும் இந்நூல் உள்ளது. விவசாயம் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இந்த நூல்.
விவசாயிகளைப் பாதுகாப்போம்
- சு.சண்முகவேல், ஈரோடு.
பக்கங்கள்: 80
விலை: ரூ. 40
வெளியீடு: அறம் அறக்கட்டளை,97/98, மிஷன் வீதி, திருப்பூர்- 641 604.
தொலைபேசி: 72008 55666.
மின் அஞ்சல்: aramtirupur@gmail.com
வலைத்தளம்: http://aramtirupur.blogspot.in/
 October 2, 2012
அச்சிட அச்சிட 
Sourcehttp://www.tamilhindu.com/2012/10/save-the-formers-book-review/

இயற்க்கை விவசாயம்


இயற்கை வேளாண்மையை நோக்கி ஓர் இனிய பயணம்
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
தரணியைக் காக்கும் தலையாய தொழிலாம் வேளாண்மை, ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆதி மனிதன் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான்.
வேளாண்மை என்பது உலக உயிர்களின் பசியைப் போக்குவதற்கு பயிர்களை விளைவிப்பதாகும்.
இன்று உலகில் பல்வேறு மக்கள் பல முறைகளில் வேளாண்மை செய்கின்றனர், அதில் பண்பட்ட மக்கள் மண்ணைப் புண்படுத்தாத இயற்கை வேளாண்மை செய்கின்றனர்.
இயற்கை பற்றாளர்
இயற்கை வேளாண்மை பற்றி பேசும் இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்களை பற்றியும், அவர்களின் கருத்துகளைப் பற்றியும் இங்கு கட்டாயம் நினைவு கூற வேண்டும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஃபூகோகா அவர்கள் இயற்கையின் பின்னணியில் செடிகள் வளர்ப்பில் பல ஆராய்ச்சிகள் செய்து தமது “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் மூலம் இவ்வுலகிற்கு இயற்கை வேளாண்மையின் .இன்றியமையாமை பற்றி எடுத்தியம்பினார்.
அவர் தன் நூலில் இயற்கை வேளாண்மைக்கு என சில கொள்கைகளை கூறுகின்றார். அவை 
௧. எந்த ஒரு இரசாயன உரங்களும் தேவை இல்லை
௨. பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவை இல்லை
௩. அடிக்கடி களை எடுக்கத்தேவை இல்லை
௪. அடிக்கடி மண்ணை உழத்தேவை இல்லை
௫. இயந்திரங்களும் தேவை இல்லை
இயற்கையே அனைத்தையும் நிகழ்த்தும், மனிதன் எதுவும் செய்யத் தேவை இல்லை என்கிறார். அவருடைய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகில் பல இடங்களில் இயற்கை விவசாயம் நடை பெற்று வருகிறது .
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை இம்சைப்படுத்தாமல் செய்வது, இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது.இயற்கையினுள் செயற்கையை புகுத்தாமல் இயற்கையை இதமாக அதன் போக்கில் விடுவது,இரசாயனத்தைப் புகுத்தி இயற்கையை ரணப்படுத்தாமல் இருப்பது.
இயற்கை வேளாண்மை என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும். இயற்கை வேளாண்மைக்கு எனத் தனியாக எந்தவொரு கொள்கைகளும் வகுக்கப்படவில்லை.
இயற்கை வேளாண்மையில் முக்கியமானது பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிருடுதலாகும்.
பறவைகளைப் பார்த்து பறக்க கற்றுக்கொண்டோம்
மீன்களைப் பார்த்து நீந்த கற்றுக்கொண்டோம்
இயற்கையை ஆழ்ந்து கவனித்தாலே இயற்கை வேளாண்மையை கற்றுக்கொள்வோம்
இயற்கை வேளாண்மை என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை. காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம். காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களைஎடுப்பதும் இல்லை அவை தானாகவே வளருகின்றன. அதன் நல்வளர்ச்சிக்கு காரணம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும், மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது, இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை.
நாமும் இதே போல “ஏதும் செய்யாத வேளாண்மை”யை செய்யலாம், ஆனால் இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது, மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும். மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததாகும்.
பாரம்பரிய வேளாண்மை
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்னும் பழமொழிக்கேற்ப உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி ஆராய இங்கு முடியாததால் நம் தாய் திருநாடான இந்தியாவில் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் இக்கட்டுரையில் எடுத்தியம்பியிருக்கிறேன்.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். அதன் புகழை தரணியில் உயர்த்தியதே அதன் தங்கப்புதல்வர்கள், தவப்புதல்வர்களாகிய விவசாயிகள் தான்.
அதனால் தான் நமது முன்னால் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் “ஜெய் ஜவான், ஜெய் கிஸான்” எனப்புகழ்கின்றார். இந்திய மக்கள் தொகையில் 64சதவீத மக்கள் விவசாயத்தை முழு நேரத்தொழிலாக செய்து வருகின்றனர்.
“இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றி தரு நாடு”
– என்று முண்டாசு கவிஞன் பாரதியால் புகழப்பட்ட நம் நாட்டில் இயற்கை வேளாண்மை என்பது நாம் மூதாதையர்களின் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. நம் சங்க இலக்கிய நூல்கலான புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் கூட இயற்கை வேளாண்மை பற்றி பல குறிப்புகள் உள்ளன.
நம் முன்னோர்கள் எந்த ஒரு இரசாயன உரங்களையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாதலால் தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்தனர், அதிகளவு மகசூல் பெற்றனர்.
தமிழ் மறையாம் திருக்குறளிலும் வேளாண்மையைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”
-உழவன், ஒரு பலம் புழுதி கால்பலமாகும் படி தன் நிலத்தை உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும்.
இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தை புரிந்து கொள்கின்றோம், நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது. நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம்.
திருவள்ளுவர் உழவு எனும் அதிகாரத்திலேயே விவசாயம் பற்றிய பல விசயங்களை புரிய வைக்கின்றார்.
“ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு”
- ஏர் விட்டு உழுதலை விட எரு இடுதல் நல்லது, இவ்விரண்டும் செய்து களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதை விட பயிரை அழியாமல் காப்பது நல்லது” – எனும் குறலின் மூலம் நம் முன்னோர்கள் பயிர்களுக்கு இயற்கை முறையில் எரு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தியதை அறிகிறோம், மேலும் வேளாண்மைக்கு எது சிறந்ததென ஒரு குறலின் மூலமே அறிகிறோம்.
ரிக் வேத காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயிர்களுக்கு வளம் ஊட்ட பசு மாட்டின் பால்,நெய்,தயிர்,கோமியம் மற்றும் வெண்ணை போன்றவற்றின் கலவையான பஞ்சகவ்யாவை பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் விதைகளை விதைக்க மூங்கில் விதைப்பான் போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேவை ஒரு மாற்றம்
“யானைக்கும் அடி சறுக்கும்” என்பார்களே அது போல விவசாயத்திலும் அதிக வளர்ச்சிகளை கொண்டிருந்த நம் நாட்டிலும் 1960-65 ஆம் ஆண்டுகளில் கடும் பட்டினி,பஞ்சம் ஏற்பட்டது.
மக்களின் பஞ்சத்தை போக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன, அதன் மூலம் நாம் பயிர் விளைச்சலில் தன்னிறைவு அடைந்தோம். ஆனால் நாம் பாரம்பரிய முறைகளை கைவிட்டு ரசாயன உரங்களையும், வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் நம் உடமையாக ஆக்கிக்கொண்டோம். ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் மானியம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவும் அதனை பயன்படுத்துவதால் மகசூல் கூடுகிறது என்ற எண்ணத்தினாலும் நவீன கால வேளாண்மையான ரசாயனங்களை மையமாக கொண்ட வேளாண்மை நம்மை நன்கு ஆக்கிரமித்து கொண்டது.இதன் விளைவாக நாம் வளமான மண் மலடாகியது, பொன் விளையும் பூமி இன்று புண்ணாகியது.
பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.
இன்று விவசாயம் என்னும் பெயரில் பயிர்களுக்கு விஷச்சாயம் பூசும் பணி நடக்கின்றது. “சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு நம் மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.” வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.
“சென்றதினி மீளாது மூடரே” எனும் பாரதியின் வாக்கிற்கு ஏற்ப கடந்தததை நினைத்து வருந்தாமல், நாம் செய்த தவற்றை திருத்த இதுவே உகந்த நேரம். நம் வருங்கால சந்ததியினர் வளமுடன் வாழ வேண்டுமென்றால், வளம் குன்றிய மண்ணை அவர்கள் வசமாக்காமாலிருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு, நிரந்தரதீர்வு நாம் அனைவரும் இயற்கை வேளாண்மையை கடைப்பிடிப்பதாகும்.
தற்கால நவீன விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக முதலில் மகசூல் அதிகமானாலும், பின்னால் மண்ணின் வளம் குன்றி விவசாயத்தின் வளர்ச்சி குன்றி விட்டது. சுற்றுசூழல் சீர்கேட்டையும், மனித ஆரோகியத்தையும் கெடுத்து விட்டன.
“தேசிய குற்ற ஆவண அமைப்பின் கணக்கெடுப்பின் படி 1997 லிருந்து 2007ம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 1லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆகும்.
“பலகுடை நீழலும்தம் குடைக்கீழ்க் காண்பார்
அலகுடை நீழலவர்”
– அரசாளும் மன்னர்களே ஆனாலும் உலகுக்கு உணவு படைக்கும் விவசாயியின் குடையின் கீழ்தான் இருப்பர் என்றார் வள்ளுவர்.
அப்படி உயர்வாக புகழபெற்ற உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கெல்லாம் காரணம் விவசாயத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், ரசாயனங்களை நம்பியதாலும் தான். ஆனால் இயற்கை விவசாயத்தில் ரசாயனம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
செடி வளர்வதற்கு தேவையான தழைச்சத்து (நைட்ரஜன்) கிடைப்பதற்கு நாம் நவீன ரசாயானத்தை மையமாகக்கொண்ட விவசாயத்தில் யூரியா போன்ற உரங்களை போடுகின்றோம். ரசாயன உரங்களில் உள்ள நைட்ரேட் மழைபெய்யும் காலங்களில் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு நிலத்தடி நீரை அசுத்தப்படுத்துகிறது. இப்படி சுற்றுசூழலை மாசடைய செய்யும் வேலை இயற்கை வேளாண்மையில் இல்லவே இல்லை.
இயற்கை வேளாண்மை முறையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்றவை கிடைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கலப்பு பயிர் முறை. ரைசோபியம் எனும் பாக்டீரியா தான் தழைச்சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து செடிகளுக்கு கொடுக்கிறது. கலப்பு பயிராக நாம் துவரை, அவரை போன்ற இரு வித்திலை தாவரங்களை பயிரிடும்போது ரைசோபியம் எனும் பாக்டீரியாக்கள் அத்தாவரங்களின் வேர் முடிச்சுககளில் பல்கி பெருகுகின்றது. இதனால் மண்ணிற்கு தழைச்சத்து கூடுகிறது மண்ணும் வளமடைகிறது.
பயிர் சுழற்சிமுறை
நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து , அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.
இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும். முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும். இன்று நம் விவசாயிகள் இதே முறையை பின்பற்றுகின்றனர்.
பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தொமென்றால் , களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.
கலப்பு பயிர்களின் நன்மை
பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர், இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர்.இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது, சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலப்பு பயிராக பருத்தியை சாகுபடி செய்கின்றனர். பாசிப்பயறு, துவரை, மொச்சை, கேழ்விரகு, சோளம் , உளுந்து என பல பயிர்களுடன் கலந்து பருத்தியை விதைத்திருக்கின்றனர். இதன் மூலமாக பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் கட்டுப்படுத்தபட்டிருகின்றன, முற்றிலும் அழிக்கப்படுகின்றன. </p.
பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் பருத்தியை தாக்கிவிட்டு ஒரு செடியிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றது. அடுத்த செடியில் அவை வேறு வித சுவையையும் தன்மையயும் உணருகின்றன, இதனால் அதற்கடுத்த செடிக்கு தாவுகின்றன. அங்கும் அவை வேறு சுவயை உணர்வதால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு வயல்களை விட்டே ஓடிவிடுகிறது, மேலும் கலப்பு பயிரான பாசிப்பயிறு, மொச்சை போன்றவற்றை அறுவடை செய்தபின் அவற்றை மூடாக்கி போட்டால் மண்ணிற்கு வளமும் கூடுகின்றது, தென்னை மரத்திற்கு நடுவே பப்பாளி, பாக்கு ஆகியவற்றை கலப்பு பாயிராக நடலாம். இன்று மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரியைப்பற்றி பல சர்ச்சைகள் கிளம்பும் இந்நேரத்தில் நம் விவசாயிகள் இயற்கை முறையில் பருத்தியை விளைவிப்பதும், அதன் காய் புழுக்களை கட்டுப்படுத்துவதும் நம் இயற்கை வேளாண்மை முறையால் தான் சாத்தியமாயிற்று. இதுபோல் கலப்புப்பயிர் முறையில் பல நன்மைகள் உள்ளன.
இயற்கை பூச்சிவிரட்டி
ஜெர்மனியை சேர்ந்த பால் முல்லர் என்பவர் 1942ம் வருடம் பூச்சிகளைக் கொள்வதற்காக டீடீபி பூச்சிக்கொல்லியை கண்டு பிடித்தார். பூச்சிகளில் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன, சிலந்தி, ஊசித்தட்டான், மண்புழு, நண்டு, நத்தை ஆகியவை நன்மை செயும் பூச்சிகள் ஆகும். பச்சைக்காய் புழுக்கள், தரை வண்டுகள், காண்டாமிருக வண்டுகள், அசுவினி, வெள்ளை ஈ, கத்தாழை பூச்சி, குருத்துப்புழு, இடைக்கணு புழு ஆகியவை தீமை செய்யும் பூச்சிகள் ஆகும்.
நம் முன்னோர்கள் பூச்சிகளில் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளைப்பற்றி அறிந்து இருந்தனர் ., ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது பூச்சிகளில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன. எனவேஇயற்கை மூலிகைகளை வைத்தே பூச்சிகளை விரட்டினார்கள். அவர்கள் பயறுகளில் உள்ள பூச்சிகளைய் நீக்க மிளகாய்வற்றல், மிளகு, காய்ந்த வேப்பிலை போன்ற பொருட்களை உபயோகப்படுத்தினர்.
இன்று இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறவர்கள் இப்பூச்சிகளின் தன்மையை அறிந்திருக்கின்றனர். அதனால் சில மகளிர் குழுக்கள் கூட தங்கள் குழுக்களுக்கு சிலந்தி, ஊசித்தட்டான் என நன்மை செயும் பூச்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் இன்ரைய விவசாயிகள் மூலிகை பூச்சிவீரட்டியை பயன்படுத்திகின்றனர்.
மூலிகை பூச்சிவிரட்டி என்பது எருக்கு, நொச்சி, வேம்பு, புங்கன் ,முருங்கை, ஆடதொடை ஆகியவற்றின் இலைகளை கைப்பிடி அளவு இடித்து 10லிட்டர் மாடு கோமியம் கலந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் நன்கு ஊறவைத்து தயாரிப்பதாகும். மேலும் கத்திரிச்செடிகளுக்கு வேப்பங்கோட்டை கசாயம், பூண்டு கசாயம், வசம்பு கசாயம் போன்றவற்றை பூச்சிவீரட்டியாக பயன்படுத்துகின்றனர்.
கத்திரி விளைச்சலுக்கு காய்ப்புழு, அசூவினி, இழை சுருட்டு புழு போன்ற பிரச்சனைகள் வரும், இவற்றையெல்லாம் நீக்க வேம்பு எண்ணெய், புங்கன் எண்ணெய், காதி சோப்பு கரைசால் ஆகியவற்றால் தயாரான “பொன்னீம்” என்ற பூச்சிவீரட்டியை பயன்படுத்துகின்றனர். இந்த பொன்னீம் லயொலா கல்லூரியின் தயாரிப்பாகும்.
மூடாக்கு போடுதல்
இயற்கை விவசாயத்தின் முக்கியமான ஒன்று மூடாக்கு போடுதல். வைக்கோலை நெல் போன்ற பயிர்களின் மீது மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணில் உள்ள மண்புழுக்கள் பெருகுகின்றன, மண் அரிப்பு மற்றும் நீர் ஆவியாவததை தடுக்கின்றது. மண்ணில் ஈரப்பதம் அதிகமாகின்றது.
பயிருக்கு தேவையான சதுக்களை அதிக மடங்கு கிடைக்க செய்கின்றது, மூடாக்கி போடுவதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தென்னந்தோப்பில் விழும் மட்டைகள், ஓழைகள் போன்றவற்றை எரிக்காமல் அவற்றை மரத்தை சுற்றி மூடாக்கி போட்டால் களைகள் கட்டுப்படும்.
நவீன விவசாய முறையை பின்பற்றும் விவசாயிகள் கரும்பு வெட்டும் பொழுது சோகைகளை அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அந்த சோகைகளை முடக்கு போட்டு தண்ணீர் பாய்ச்சிடுவார்கள், இதனால் மொத்த சோகைகளும் மட்கி நல்லதோர் உரமாகும். மூடாக்கி போடுவதால் மகசூல் கூடுகிறது, தண்ணீர் செலவு குறைகிறது.
ஜீவாமிர்தம்
இயற்கை வேளாண்மையில் நம் விவசாயிகள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்திக்கின்றனர்.
ஜீவாமிர்தம் மண்ணீலுள்ள நுண்ணுயிரிகளை பெருக்கும் ஊடகம், இது ஊட்டச்சத்துகளை செடிகள் எடுத்துகொல்லும் வேலையைச் செய்கிறது.
இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்த்ததின் நல்ல பயன்களை பற்றி விவசாயிகலுக்கு எடுத்தியம்பி அதன் மூலம் நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தினார்.
ஜீவாமிர்தம் எனப்படுவது நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுமூத்திரம், கருப்புநிற வெல்லம், தானிய மாவு, மண் போன்றவற்றின் கலவையால் தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியாகும்.
“ஜீவாமிர்தம் போன்ற நுண்ணுயிர் ஊக்கிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை வேகமாக செயல்பட வைத்து, மண்ணை வளப்படுத்தி எல்லாவித சத்துகளையும் மண்ணிற்கு தருகின்றது”. இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்தத்தின் நற்பயன்களைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்தியம்பி அதன் மூலம் நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.ஜீவாமிர்தத்தை மிகக்குறைந்த செலவில் தயாரித்து, பயிர் வளர்ச்சியில் நிறைந்த லாபத்தை நம் இயற்கை விவசாயிகள் அடைந்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசலின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் முளைப்புத்திறன் கூடுகிறது, வளமான நாற்றுகள் உருவாகின்றன, இன்று பல விவசாயிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இயற்கை வேளாண்மையில் யூரியாவிற்கு நல்லதொரு மாற்று பொருளாக நெய்வேலி காட்டாமணக்கு அமைந்துள்ளது.”1962ம் ஆண்டிலிருந்தே தமிழக உழவர்கள் தழைச்சத்துக்காகவும், பூச்சி விரட்டியாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்”.
மேலும் மண்ணை வளப்படுத்த இயற்கை வேளாண்முறையில் பல தொழில்நுட்பங்கள் உள்ளன
ஆழமாக வேர் விடும் தாவரங்களை பயிரிட்டால் அவை ஆழத்தில் உள்ள சத்துகளை உறிஞ்சுகின்றன. மேலும் அவற்றை மடக்கி உழும் பொழுது தனது தாவரப்பாகங்களை பூமிக்குத் தருகின்றன, இதனால் மண்ணின் வளம் கூடுகின்றது.
இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களுக்குப் பதிலாக நம் மக்கள் தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்றவற்றை அடியுரமாக போடுகின்றனர். இதனால் மண் புழுக்களின் எண்ணிக்கையும் பெருகுகின்றது.வயல் வெளிகளில் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உள்ளது. கிராமப்புறங்களில் கருக்கலில் எழுந்து பெண்கள் மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டு வயல் வெளிகளில் போடுவர், இவையெல்லாம் நல்ல இயற்கை உரமாகும்.
ஈரோடு மாவட்டத்தில் ஆட்டு ஓட்டம் நல்லதொரு பயிர் வளர்ச்சி ஊக்கியாக உள்ளது.
ஆட்டு ஓட்டம் என்பது வெள்ளாடு கோமியம், வெள்ளாடு எரு,பால், தயிர்,பசு நெய், இளநீர் ஆகியவற்றின் கலவையால் செய்யும் இயற்கை பொருளாகும்.
பாரம்பரிய விதைகள்
பாரம்பரிய விதைகள் உணவுக்காக மட்டும் இன்றி மருந்தாகவும் பயன்பட்டது.பாரம்பரிய விதைகளை
பயன்படுத்துவதால் இரசாயன உரம் போடத்தேவை இல்லை. பூச்சிகளை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி பாரம்பரிய விதைகளுக்கு உண்டு. தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா,மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் ரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளை கையாண்டனர்.தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு விதைகளை காய வைத்தனர் இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது.பஞ்சாங்கம் போன்றவை உருவாக்கி அதன் மூலம் கால நிலைகளை அறிந்து இயற்கைக்கு ஏதுவாக விதைகளை நட்டனர். பருவத்தே பயிர் செய்தனர் .இவையெல்லாம் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் தான்.நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாய் பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்து கொண்டிருக்கிறோம்.
கண் இருந்தும் குருடராய் அயலான் காட்டிய தவறான வழியில் சென்று தரமற்ற விதைகளை நட்டதால் நாம் நம் நிலத்தை மாசு படுத்தினோம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை அழித்தோம். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் அருமையை உணர்ந்து அதனை சேகரித்து பயிர் இடுகின்றனர். மேலும் பாரம்பரிய விதைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர்.இவையெல்லாம் நன்மைக்கான மாற்றங்கள் ஆகும்.
தொழில்நுட்ப கருவிகள்
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இன்று விஞ்ஞானிகள் போல திகழ்கின்றனர், விவசாயத்தை எளிமைப்படுத்த பலவித கருவிகளை தாயாரிக்கின்றனர்.
கரும்புதோகைகளை மூடாக்கு போடும் வகையில் பொடி பொடியாக வெட்டி தரும் இயந்திரம் ஸ்ரீநாட் . இதன் மூலம் மூடாக்கு போடும் வேலை எளிமையாகிறது.
செடியில் இருந்து கடலையை பிரிதெடுக்கம் கருவியை புதுச்சேரியை சேர்ந்த H.M.அந்தோணி என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.
மதுரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்பவர் சிறிய பரப்பளவு கொண்ட வயல்களில் கரும்புகளை வெட்ட கரும்பு வெட்டும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.
செல்போன் மூலம் பம்பு செட்டை இயக்கும் மென்பொருளை கோயம்புத்தூரைய் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண் கண்டுபிடித்திருக்கிறார்.
இதனால் விவசாயிகள் மிகவும் பயன்பெறுகின்றனர்.
இப்படி புதுப்புது தொழில்நுட்ப கருவிகளை இயற்கை விவசாயத்தில் உபயோகப்படுத்தி பயன் பெறுவோம்.
முடிவுரை
“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரித்தவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களைத் தீர்ககவோர் வழியில்லையே”
என்று வேதனையுற்றான் பாரதி. மக்களின் வேதனையை, அவர்களுக்கு வந்த சோதனையை நீக்க ஒரே வழி செலவு குறைந்த, வரவு நிறைந்த இயற்கை விவசாயத்தொழில்நுட்பமேயாகும்.
பசுமை புரட்சியின் தந்தை டாக்‌டர் எம்.எஸ் சுவாமிநாதன் கூட ‘நிலைத்த நீடித்த இயற்கையோடு இணைந்த விவசாயம் தான் இனி சரிப்பட்டு வரும்’ என்று வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்.இயற்கை விவசாயத்தின் மகிமை பற்றி மக்களிடம் விளக்க இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர், பசுமை விகடன் இதழ் போன்றோர் பெரும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
அவர்களின் வழிகாட்டுதல் மூலமாக இன்று நாம் நாட்டில் பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர், மறுமலர்ச்சியை உருவாக்கி வருகின்றனர்.சுற்றுச்சூழல் மாசுப்பட்டதின் விளைவாக இன்று தாய்ப்பாலில் கூட விஷம் என்ற நிலைமை உருவாகி விட்டது, இனியும் நாம் தாமதித்தோமென்றால் தரணி தரை மட்டமாக்கி விடும். இயற்கை வேளாண்மை வெற்றி அடையுமா என்ற கேள்விக்கு விடையாக “world watch Institute” 2006ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வுகளே ஆதாரமாகும். அதில் உலக உழவர்கள் அனைவரும் இன்றே இயற்கை விவசாயத்திற்கு மாறினால் வளர்ந்த நாடுகளில் விளைச்சல் இப்போது இருப்பதை காட்டிலும் 80% இருக்கும். வளரும் நாடுகளில் 2 முதல் 4 மடங்கும் இருக்கும்” என்று கூறுகிறது. உலகில் வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம் , எனவே அந்நாடுகளில் வேளாண்மை வெற்றியடைந்தால் உலகம் வெற்றியடையும். எனவே இயற்கை வளம் பேணும், மண் வளம் காக்கும், தரமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தை இனிதே வரவேற்போம்.
இயற்கை விவசாயம் பண்ணுவோம் – இன்று
இன்னல்களால் இம்சைபடும் நாம் – இனிமேல்
இன்பத்தை மட்டுமே அனுபவிப்போம்
இயற்கையின் போக்கில் செல்வோம்
இனிதே வாழ்வோம்!
நன்றி: மணற்கேணி
Source :http://rasibiotech.blogspot.in/2012/04/blog-post_2482.html
நல்லூர் முழக்கம் 

Tuesday, January 29, 2013

மாட்டுப் பொங்கல்! சிறப்பு என்ன? ஓர் அலசல்!




yatra-3
மாட்டுப் பொங்கல், மனிதர்களின் வாழ்வுடன் ஒன்றிவிட்ட ஆவினங்களை ஆராதிக்கும் திருநாள். பசுவும் காளையும் உழவர்களின் நண்பன் என்பதோடு, அவை ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டவை. காளையின் உரு கொண்டவரே நந்தியம் பெருமான், அவர் ஈசனின் வாகனமாகவும் உள்ளார். அதனாலேயே சிவனை இடபக் கொடியோன் என்பார்கள். ஈசன் நந்தி மீதேறி வருவான் என்பதை ‘வெள்ளை எருதேறி’, ‘விடையேறி’ என்றெல்லாம் திருமுறைகள் கூறுகின்றன. ‘நந்தி நாமம் நமசிவாய’ என்று தேவாரமும், ‘நங்கள் நாதனாம் நந்தி’ என்றும் திருமந்திரமும் பேசுகின்றன. ஆகவே, நந்தியும் சிவமும் வெவ்வேறல்ல என்பது தெளிவாகிறது. சிவன் கோயில்களில் விழா நடக்கும்போது நந்திக் கொடியை பறக்க விடுவது வழக்கம்.
பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் உறைவதாக, வேதங்களும் சாஸ்திரங்களும் உறுதியாகக் கூறுகின்றன. மகாலட்சுமியின் பூரண அம்சமும் உறைவிடமும் பசுதான். பசுவின் குளம்படி தூசுகள் பாவத்தையும் சேர்த்து பறக்கடிக்கும். ‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’ என்று திருமூலர் வேண்டுகோள் விடுக்கிறார். இறைவன் எடுக்கும் எல்லா அவதாரங்களும் பசுக்களோடு அன்யோன்யமும் நெருக்கமும் கொண்டிருப்பதை புராணங்கள் வாயிலாகக் காணலாம். மேலும், இன்று நாம் வணங்கும் பெரிய மற்றும் சிறிய கோயில்களில் உறையும் தெய்வங்களை ஆதிநாட்களில் பசுக்கள்தான் கண்டறிந்தன.
பசுக்களே அனுதினமும் பூஜித்து மகிழ்ந்த கோயில்களும் பசுவின் பெயராலேயே ஈசன் விளங்கும் ஆலயங்களும் நிறைய உள்ளன. அவை பசுபதீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் என்றெல்லாம் வழங்கப்படுகின்றன. மாட்டுப் பொங்கலன்று நாம் ஆவினங்களை தொழுவதோடு நின்றுவிடாமல், மற்ற நாட்களிலும் பசுக்கள் பூஜித்த தலங்களுக்குச் சென்று, ஐந்தறிவு ஜீவனானாலும், பக்தி மார்க்கத்தில் மானுடர்களுக்கு சளைத்தவை அல்ல என்பதை அவை நிரூபிப்பதை அறிந்து மகிழலாம். பசுவின் திருமுகமே தெய்வீகத் தன்மை வாய்ந்தது. கண்களில் சூரிய, சந்திரரும், முன் உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். கோயிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீரை பக்தர்கள் ஏந்தி உட்கொள்வதற்கும், தலையில் தெளித்துக்கொள்வதற்கும் கோமுகம் உதவுகிறது.
பசுவின் முகம் (கோ முகம்) அத்தனை பவித்ரமானது என்பதை உணர்த்துவதற்குதான் இந்த ஏற்பாடு. பெரிய வேள்விகளில் உருகிய நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப் போன்றே இருக்கும். பாரத தேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன. தஞ்சாவூர்-திருவையாற்றைச் சுற்றி சப்த ஸ்தானங்கள் எனப்படும் ஏழு கோயில்கள் உள்ளன. இவை யாவும் நந்தியம் பெருமானின் திருமண நிகழ்வோடு தொடர்புடையவை. நந்தியம்பெருமானுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் பொருட்டு திருவையாறு, திருப்பழனம், திருவேதிக்குடி, திருச்சோற்றுத்துறை, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருக்கண்டியூர் ஆகிய இந்த ஏழு ஊர்களுக்கும் ஈசனும் அம்மையும் திருவுலா வருவர்; நிறைவாக திருமழபாடியில் நந்தி திருமணத்தை நடத்தி வைப்பர்.
பார்வதி தேவியே பசு உருவில் திருவாடுதுறை ஈசனை வழிபட்டு முக்தி பெற்றதால், கோமுக்தீஸ்வரராக ஈசன் அருள்கிறார். கரூர் எனும் தலம் காமதேனுவால் பூஜிக்கப்பட்டது. அதனாலேயே பசுபதீஸ்வரர் என்றும் ஆநிலையப்பர் எனவும் இங்குள்ள இறைவன் அழைக்கப்படுகிறார். கும்பகோணம்-திருப்பனந்தாள் தலத்திற்கு அருகேயுள்ள பந்தணைநல்லூரில், ஈசன் பசுபதீஸ்வரராக காட்சி தருகிறார். வசிஷ்டரின் சாபத்தைப் பெற்ற காமதேனு பூஜித்த முக்கிய தலமாக, ‘ஆ’ எனும் பசுவின் பெயராலேயே விளங்கும் தலம்தான் ஆவூர். இது தசரதர் வணங்கிய கோயிலும் ஆகும். வசிஷ்டரால் வாஜபேயம் என்கிற யாகம் இங்கு நிகழ்த்தப்பட்டது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதேபோல திருவண்ணாமலைக்கும் விழுப்புரத்திற்குமிடையேயும் ஓர் ஆவூர் தலம் உள்ளது. தஞ்சாவூர்-அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள பசுபதி கோயில் இறைவன், பசுபதீஸ்வரர் எனப்படுகிறார்.
தஞ்சைக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டை கோயில் இறைவனான பசுபதீஸ்வரர், காமதேனுவால் பூஜிக்கப்பட்டதால் அப்பெயர் கொண்டார்.
மாடுகளை கட்டும் தொழுவத்துக்குப் பட்டி என்றும் பெயர். இதையொட்டியே நிறைய ஊர்களுக்குப் பின்னால் பட்டி என்று சேர்த்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரராக ஈசன் அருள்கிறார். இதுவும் காமதேனுவால் பூஜிக்கப்பட்டதே. கொங்கு நாட்டிலுள்ள பெரும்பாலான சிவாலயங்கள் காமதேனுவால் வணங்கப்பட்டவை. அவற்றில் முக்கியமாக, ஆதிபட்டீஸ்வரம் என்றழைக்கப்படும் பேரூர் தலத்தைச் சொல்லலாம். இங்குள்ள ஈசனின் பெயர், பட்டீஸ்வரர். கும்பகோண பட்டீஸ்வரத்திலிருந்து இதனைத் தனியே பிரித்துக் காட்ட, இத்தலத்தை ஆன்பட்டீஸ்வரம் எனவும்
அழைத்தனர்.
தங்களை தற்காத்துக்கொள்ள, திரு ஆமாத்தூர் என்கிற திருவாமாத்தூரில் பசுக்கள் ஈசனை வழிபட்டு, கொம்பைப் பெற்றன. விழுப்புரத்திற்கு அருகிலுள்ள இத்தலத்தை பசுக்களின் தாய்வீடு என்றே அழைப்பர். திருவாரூர், நன்னிலத்திற்கு அருகே கொண்டீச்சரம் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கும் காமதேனுவின் மகளுக்கும் கொண்டி என்கிற பெயர் உண்டு. இந்த கொண்டியான அம்பிகை, பசு வடிவத்தில் சிவனை வணங்கியதால், இறைவன் பசுபதீஸ்வரர் ஆனார்.
சென்னை, குன்றத்தூருக்கு அருகேயுள்ள கோவூரில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு அழகு சுந்தரராக காட்சியளித்தார். ‘கோ’ எனும் பசு வழிபட்டதாலேயே இன்றும் கோவூர் என்றழைக்கப்படுகிறது. கோமளம் என்கிற சொல்லுக்கு கறவைப்பசு எனும் பொருளும் உண்டு.
இப்படி கறவைப் பசுவால் வழிபடப்பட்ட கோமளேஸ்வரர் திருக்கோயில் சென்னை-சிந்தாதிரிப் பேட்டையில் அமைந்துள்ளது. சென்னை-மாடம்பாக்கத்திலுள்ள ஈசனை பசு(காமதேனு) பூஜித்ததால், அவர் தேனுபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மிக ஆச்சரியமாக பொள்ளாச்சிக்கு அருகே களந்தை எனும் தலத்தில் கருவறையிலேயே அம்பிகை பசுவோடு சேர்ந்து எழுந்தருளியிருக்கிறாள். நாகப்பட்டினத்திற்கு அருகேயுள்ள சிக்கல் முருகன் தலத்தில் உறையும் ஈசனின் திருப்பெயர் வெண்ணெய்பிரான் என்பதாகும். இங்கு, காமதேனுவின் பால், குளமாகத் தேங்கி வெண்ணெயாக மாறியதை வசிஷ்டர் லிங்கமாக்கி வழிபட்டார்.
தேனு என்று ஊரின் பெயரோ, ஈசனின் திருப்பெயரோ இருந்தால், அவையெல்லாம் பசு பூஜித்த தலங்களாகும். மேல்மருவத்தூர்-அச்சிறுப்பாக்கத்திற்கு அருகே தேன்பாக்கத்தில் பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது.
அதேபோல கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர் உண்டு. இப்படி கபிலையால் பூஜிக்கப்பட்ட தலமாக, திருப்பதி மலையடிவாரத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. நெல்லை, சங்கரன் கோவிலில் அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். கோ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் கோமதி என்றே இன்றும் வணங்கப்படுகிறாள். கோமாதாவை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும். கோசாலை என்கிற பசுக் கொட்டிலின் அருகே சென்றாலேயே தெய்வீக அதிர்வுகளுக்கு நாம் ஆட்படுவது நிச்சயம். மனம் அமைதியாவதை உணர முடியும். அதனால்தான் பெரியோர்கள், கோசாலையில் அமர்ந்து நாம ஜபம் செய்வது, கோடி மடங்கு பலன் தரும் என்று சொல்லி வைத்தார்கள். எங்கே பசுவைப் பார்த்தாலும் மனதுக்குள் வணங்குவதும், ஏதேனும் கோசாலைக்கு (பசுமடம்) இயன்ற உதவிகளை அளிப்பதும் நம் வாழ்வில் வளம் சேர்க்கும் என்பது திண்ணம்.
நன்றி :://www.kalapam.ca/

பசுவின் பால் அருந்தினால் எய்ட்சை தடுக்கலாம் ! (?)


மெல்போர்ன்: உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி., எய்ட்சை ,பசுவின் பால் அருந்தினால் தடுக்கலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மார்டிட் கிராம்ஸ்கி இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். அவர் சோதனையின்படி, கருவுற்றிருந்த பசு ஒன்றில், எச்.ஐ.வி., புரோட்டீன்களை (ஆன்டிஜென்ஸ்) உட்செலுத்தி, அந்த பசு கன்று ஈன்ற பின் தந்த முதல் பாலை (கொலாஸ்டிரம்) சோதனை செய்து பார்த்தில், எச்.ஐ.வி.,யை தடுக்கக்கூடிய ஏராளமான எதிர் உயிரிகள் (ஆன்டிபாடீஸ்) இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
தற்போது விஞ்ஞானிகள் இந்த முறை எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இம்முறை சாத்தியப்படும் பட்சத்தில் இவ்வகை பால், கிரீமாக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது சோதனை குறித்து மார்டிட் கிராம்ஸ்கி கூறுகையில், எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில், எதிர் உயிரிகள் நிறைந்த புரோட்டீன் (ஆன்டிபாடீஸ்) ஒட்டிக்கொள்ளும். இதனால் எச்.ஐ.வி., வைரசால், மனித செல்களில் ஒட்டிக்கொள்ள இயலாது. இதன் மூலம் மனிதர்களுக்கு எச்.ஐ.வி., பரவுவது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி., வைரசின் மேற்பரப்பில் பூட்டில் சாவியைப் போல எதிர் உயிரி புரோட்டீன் இணைவதால், எச்.ஐ.வி., வைரசால் வேறு எந்த செல்லுடன் இணைய முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. தற்போதைய சூழலில், ஆணுறைகளை அடுத்து மிகவும் எளிமையாக எச்.ஐ.வி.,யை தடுக்கும் வழியாக இது அமையும் என கிராம்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் ஒரு கவலை தரத்தக்க விஷயம் என்னவென்றால் இம்முறை செயல்பாட்டிற்கு வர இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது தா

Source :http://www.dinamalar.com/

பதிவு செய்த நாள் : அக்டோபர் 17,2012,

நன்றி

பசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை


பசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலை

 முகலாய சாம்ராஜ்யத்தில் முஸ்லிம் மன்னர்கள் - பாபர் முதல் அகமத்ஷா ஆட்சி காலம் வரை பசுவதை முற்றிலும் தடைசெய்யப்பட்டு இருந்தது. இஸ்லாத்தை உறுதியாக பின் பற்றுவதில் பெயர்போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர யாரும் பசு வதையை ஆதரிக்ககூடாது என கடுமையாக வலியுருத்தினார் . மைசூர்
சுல்தான்களாகிய ஹைதரும், திப்புவும்கூட பசுக்களை கொல்வதை தடைசெய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளைவெட்டும் கடும் தண்டனையும் விதித்தார்கள்!

ராபர்ட்கிளைவ்: இந்திய விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள்தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன் முதலில் பசுவதை கூடங்களை அமைத்தான் .

காந்தி: பசுவதையை தடுப்பதற்கு சட்டம் இயற்ற வர்ப்புருத்தினார் .

நேரு: சுதந்திர இந்தியாவில் முதல்நடவடிக்கை பசுவதை கூடங்களை மூடுவதே என கூறிய நேரு, பின்னாளில் பசுவதையை நிறுத்தசொன்னால் பதவி விலகுவேன் என மிரட்டி பசுவதைக்கு ஆதரவளித்தார்.

இந்திரா: பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் மக்களை துப்பாக்கி சூடுமூலம் கொன்று அடக்கு முறையை கையாண்டார்.

மரபணுக்கள் மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியா விற்குள் திணிக்கப்பட்டன.

நம்மாழ்வார்: பசுக்கள் நடமாடும் இயற்கை உரதொழிற்சாலைகள் என வலியுறுத்தி வருகிறார். விலை மதிப்பில்லா பஞ்ச கவ்யம் மற்றும் இயற்கை உரங்களைதரும், மரபு பசுக்கள் நமதுசொத்து, அவற்றை காக்கவேண்டிய அவசியம் குறித்து வலியுருத்தி வருகிறார்.

பணத்துக்காக இன்று மர பின பசுக்கள் அதிக அளவில் அழிக்கப்படுகின்றன. பசு வதை என்பது வெளிநாட்டின் சூழ்ச்சி என்பதை யாரும் அறியாமல் அதற்கு ஆன்மீகசாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என கூறிக்கொண்டு நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள். மனிதர்களைவிட மாடுகள் அதிகமாக இருந்த பங்களாதேசில் மாடுகள்_அழிந்து இன்று குழந்தை பால்பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சிமருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர் நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்...

Source :!http://tamilthamarai.com/political-science/3450-2012-11-19-05-31-54.html