Tuesday, January 1, 2013

தேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் ?


நாடு முழுவதும் இறைச்சிக்காக பசுக்களை கொல்ல தடை விதிக்கும் வகையில் தேசிய பசு வதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
வலியுறுத்தியுள்ளார்.
 பா.ஜ. ஆளும் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பசுவதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது. குஜராத்தில் பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ராஜஸ்தானில் பா.ஜ. ஆட்சி செய்த போது பசுவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பசுவை கொல்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்க மத்திய பிரதேசத்தில் பசுவதை தடுப்பு சட்டம் வகை செய்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பசு வதையை தடை செய்ய மத்திய அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
காந்தி நகரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் நேற்று மோடி பேசினார். அப்போது, பசுக்களை பாதுகாக்க தேசிய பசுவதை தடுப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். ரயில்களில் பசு இறைச்சியை ஏற்றி செல்ல தடை விதிக்க வேண்டும் என்றார்.
 Source :http://nilavaram.com/index.php?option=com_content&view=article&id=7261:2012-02-07-02-32-23&catid=99:indian-news&Itemid=462

No comments:

Post a Comment