Saturday, January 12, 2013

பசுவை பற்றி ஸ்வாமி ஓம்கார் at சாஸ்திரம் பற்றிய திரட்டு

நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத்தான். சாணத்தை ஒரு அசிங்கமான பொருளாக பார்க்கும் இளைஞர்களை பார்க்கிறோம். நகரத்தில் பசுமாடுகள் வளர்த்த தடையை பல மாநகராட்சிகள் வைத்துள்ளது. பசுவின் எண்ணிக்கைகள் பல நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் மனித நேயம் குறைவது, மனசிதைவு, இயற்கை மேம்பாடு என பல விஷயங்கள் பாதிக்கப்படும். இது என்ன பட்டாம்பூச்சி விளைவா என கேள்வி எளலாம். பசு ஒரு நடமாடும் சக்தி கேந்திரம்.

பசு என்று தான் சொல்லுகிறேன் கவனியுங்கள். மாடு என சொல்லவில்லை. மாடு என்பது இனம், பசு என்பது அதில் ஓர் வகை. உலகின் எந்த நாகரீகத்தையும் கவனித்தால் அதில் பசு என்பது முக்கியமான விஷயமாகும். பசுவில்லாத மனிதகுலம் தோன்றாது. காரணம் பசு என்பது தாய்க்கு சமம் என்பார்கள். இது பால் கொடுப்பதாலோ அல்லது பாசத்துடன் இருப்பதாலோ அல்ல. பசு என்பது தோற்றத்தின் அடிப்படை. 

பசு ஒரு வீட்டு விலங்கு என்று படித்திருப்போம். உண்மையில் பசு என்பது வீட்டு விலங்கோ காட்டு விலங்கோ அல்ல. பசு யாரையும் சாராமல் வாழும் ஒரு உயிர். ஒரு நாய் அல்லது வேறு ஒரு உயிரை நீங்கள் செல்லப்பிராணியாக வளர்த்து பின்பு அதை வீட்டை விட்டு விரட்டினால் அது சில நாட்களில் உயிர் விடும். காரணம் அதற்கு உணவு சேகரிக்க தெரியாது. ஆனால் பசு மட்டும் தன் வாழ்க்கையை செம்மையாகவே வைத்திருக்கும். பெரிய வித்தியாசம் இருக்காது. 

உலக கலாச்சாரம் என நவீன ஆய்வாளர்கள் கூறும் எகிப்து, ஹரப்பா மற்றும் மாயன் ஆகியவற்றின் குகை ஓவியங்களிலும் , சிதைந்த சுவடுகளிலும் பசுவின் ஓவியங்களை காண முடியும். மனிதன் பசுவின் பாலை குடிப்பதால் மட்டுமே அதன் மேல் கவரப்பட்டு சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைய முடியுமா என்பது சிந்திக்க வேண்டும்.

பசு என்பது நம் ஊரில் பார்ப்பது மட்டும் பசு கிடையாது. பசுவில் பல்வகை உண்டு. ஆனாலும் பசுவினால் ஏற்படும் பயன்கள் ஒன்றுபோலவே இருக்கும். சிந்து சமய நாகரீகம் மற்றும் கிரேக்கம் ஆகியவற்றில் பசுவின் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. இன்றும் கூட ஐரோப்பிய பசுக்கள் உலக அளவில் பெயர் பெற்றவை.

பாரத தேசத்தில் மட்டும் அல்ல பல தேசங்களில் மக்கள் வழிபட்ட ஆதாரங்கள் பசுவுக்கு 
வேதகால வாழ்க்கையின் மற்றொரு அங்கம் பசு. நான் முன்பு தாவரங்களை பற்றி விளக்கினேன் அல்லவா? அது உங்களுக்கு புரிந்திருந்தால் பசுவை பற்றி புரிந்து கொள்வது எளிது. இதோ அதை எளிமையான சமன்பாட்டில் கூறுகிறேன்.

ஒரு பசு = 100 மரம்

பசு நம் உலகிற்கு என்ன தருகிறது என நான் கூறுவதற்கு முன்னால், பசு நமக்கு என்ன என்ன கொடுக்கிறது- என உங்களால் கூற முடியுமா?

No comments:

Post a Comment