Sunday, January 13, 2013

வேதகால வேளாண்மை


வேதகால வேளாண்மை

வேதகால வேளாண்மை
- உரமாகும் கிரக சக்தி

ப்ரணவ பீடம் வேதகாலவாழ்க்கையின் முக்கியத்துவத்தை கூறுகிறது. ஆனால் இதை நவீன விஞ்ஞான கொள்கை உடையவர்கள் ஏற்பதில்லை. மேலும் மேற்கத்திய கலாச்சாரத்தில் கலந்திருக்கும் அனைவரும் இதில் முரண்படுவார்கள். உண்மையில் நமது வாழ்க்கை வேதகாலத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதை முன்பே கூறி வழிநடத்துவது தான் ப்ரணவ பீடத்தின் நோக்கம். இன்னும் சில ஆண்டுகளில் வேதகால வாழ்க்கைமுறை பற்றிய விழிப்புணர்வு மேலோங்கும். மக்கள் அதன் படி வாழ முற்படும் சமயம் அவர்களை வழிநடத்த ஆட்கள் குறைவாக இருப்பார்கள். இந்த குறைபாட்டை போக்கவே ப்ரணவ பீடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

வேதகால வாழ்க்கை :

வேதகால வாழ்க்கை என்பது விஞ்ஞான பூர்வமானது. விஞ்ஞானம் என்றவுடன் நவீன கால விஞ்ஞானத்தை கருதவேண்டாம். ஓர் விஞ்ஞான கண்டுபிடிப்பானது பிற உயிர்களுக்கும், எதிர்கால வாழ்க்கை முறைக்கும் பாதிக்காத வகையில் இருந்தால், அது வேதகால விஞ்ஞானம். நவீன விஞ்ஞானம் சுயநலமானது , அவர்களின் கண்டுபிடிப்பு ஒரு விஷயத்திற்கு தீர்வாகவும் பல விஷயத்திற்கு பாதிப்பையும் தரும். உதாரணமாக உணவு பொருட்கள் பதப்படுத்த கண்டுபிடிக்க பட்ட பொருள் ஓஸோன் மண்டலத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதில் பதப்படுத்திய உணவை உட்கொள்வதால் உடல்நல குறைகளும் ஏற்படும் என்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

உங்கள் சிறுவயதில் சமையல் அறை வாயிலில் இருக்கும் தானியத்தை கொத்தும் குருவியை பார்த்திருக்கிறீர்கள் தானே? தற்சமயம் அதை காண முடியாது. உங்கள் சந்ததியினரும் இனி காணமாட்டார்கள். அதற்கு காரணம் செல்போனில் வரும் கதிர்வீச்சால் குருவி இனம் சிறுக சிறுக அழிந்து கொண்டிருக்கிறது.

நவீன ஆராய்ச்சியாளர்கள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறார்கள். எதிர்கால பிர்ச்சனையை உள்ளடக்கி ஆராய்ச்சியை தொடர்ந்தால் இது போன்ற விளைவுகளை தவிர்க்கலாம். வேதகாலத்தில் கண்டிபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் எவரையும் பாதிக்காதவாறு உள்ளது. இதை தெய்வீக கண்டுபிடிப்புகள்(divine invention) எனலாம். உதாரணமாக உலோக பயன்பாடுகள் இருந்தாலும், மண் பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என கண்டறிந்து பயன்படுத்தினார்கள். 

இந்த மண்பாண்டங்கள் பயனற்று போகும் சமயம் மண்ணுடன் கலந்து விடும். மேலும் மின் கடத்தா பொருளுக்காக இயற்கையான தர்பை புல்லை பயன்படுத்தினார்கள். தர்பை புல்லை பயன்பாட்டிற்க்கு பிறகு குப்பையுடன் கலந்தாலும் ,இயற்கையான பொருள் என்பதால் பாதிப்பதில்லை. நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பான செயற்கை ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பயன்படுத்தி ஏற்படும் விளைவை விளக்க தேவை இல்லை.நவீன விஞ்ஞானம் அனைத்தும் தவறு என கொள்ள வேண்டாம். பொது நல நோக்கமற்ற கண்டுபிடிப்பை மட்டுமே நாம் தவிர்க்க சொல்கிறோம்.


வேதகால விஞ்ஞானத்தை உள்ளடக்கிய வாழ்க்கை முறைதான் வேதகால வாழ்க்கை. ஜோதிடம், யோக சாஸ்திரம் போன்ற வேதகால விஞ்ஞானத்தை அனைத்து வாழ்வியல் கோட்பாடுகளிலும் பயன்படுத்தி விழிப்புணர்வுடன் வாழும் வாழ்க்கையாகும். இந்த முழுமையான வாழ்க்கையால் தனக்கோ பிறர்க்கோ எந்த ஒரு தீங்கும் இன்றி வாழலாம். மேலும் இதை நடைமுறை படுத்துவதால் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பால் பூமிக்கு ஏற்பட்ட குறைபாடுகளை போக்கலாம். 

வேத கால வாழ்க்கை முறையின் ஓர் அங்கமே வேதகால வேளாண்மை.


நவீன வேளாண்மை பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 வருடங்களில் ரசாயனங்களை புகுத்தி அழிவை ஏற்படுத்தியது. இயற்கைக்கு முரண்பாடான அதிக மகசூலை பெறும் சமயம் இதன் விளைவை அவர்கள் உணரவில்லை. விளைலம் சக்தி அற்றும். அதில் விளையும் பொருட்கள் சத்துக்கள் இல்லாமல் ரசாயனமாக இருக்கிறது. தற்சமயம் இந்த விளை நிலங்கள் எலும்புக்கூடாக நிற்கும் பொழுது ,நிதர்சனமும் முகத்தில் அரைகிறது. இதன் காரணமாக மனித குலத்தின் உடலில் இரத்தத்திற்கு பதில் ரசாயன கலவையே உள்ளது எனலாம். இதை தாமதமாகவே உணர்ந்தனர் நவீன விஞ்ஞானிகள். மேலும் 1980க்கு பிற்கு பிறந்தவர்களுக்கு மலட்டுதன்மை அதிகரிக்க ரசாயனம் கலந்த உணவு பொருளே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


20 வருடங்களுக்கு முன்னால் பொது இடங்களிலும் , வீடுகளிலும் மூட்டை பூச்சி கொசு ஆகிய பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். இதற்கு தனியாக ரசாயன மருந்து மூலம் அழிப்பார்கள். இவை இக்காலத்தில் மருந்து அடிக்காமலே வெகுவாக குறைந்துவிட்டது. தற்காலத்தில் மனிதனை கடிக்கும் பூச்சிகள் தாமாகவே இறந்து விடுவதால், ரசாயன மருந்து தேவையில்லை. மனிதன் அவ்வளவு ரசாயனமாகிவிட்டான். இவ்வாறு மனித இரத்தம் ரசாயனமாக மாறியதை பற்றி வேடிக்கையாக கூறுவார்கள். 

ஜெர்மானிய மக்கள், வேடிக்கையான ஒவ்வொரு விஷயத்திலும் உண்மைகளும் உண்டு என்பார்கள். அதைபோல இதில் சில உண்மையும் உண்டு. உபஷத்துகளில் ஒன்றான கடோ பஷத்து கூறும் மந்திரம் " எதை உண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்". இயற்கையான உணவை உண்டால் இயற்கையாகவும், ரசாயன கலவையை உண்டால் ரசாயனமாகவும் மாறுவது இயல்புதானே?

ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு விவசாயம் செய்வது? இயற்கை விவசாயத்தை பற்றி தெரியாதவர்கள் கேட்கும் கேள்வி இது. முற்காலத்தில் வேளாண்மை செய்யும் பொழுது ராசாயன உரம் இல்லாமல் எவ்வாறு செய்தார்கள்? இதை தெரிந்து கொண்டால் நமது வேளாண்மை வேதகால வேளாண்மை ஆகிவிடும். 

நம் முன்னேர் கண்டறிந்த "பஞ்சகவ்வியம்" ஒரு வரப்பிரசாதம். இதை உரமாக கொண்டால் மண்ணுக்கும், விளைச்சலுக்கும் எந்த கெடுதலும் கிடையாது. பஞ்சகவ்வியம், மண்புழு உரம் ஆகியவை இயற்கை நமக்கு அளிப்பவை. இதைகொண்டு வேளாண்மை செய்வதால் நல்ல விளைச்சலையும், விளைபொருட்கள் நல்ல உயிரோட்டம் உள்ளவையாக இருக்கும். இதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக் கொள்வதுடன், அனைவரையும் இதை செய்ய சொல்லுகிறது. ஆயுர்வேதம் பஞ்சகவியத்தை மருந்தாக உட்கொள்ள சொல்கிறது. 

பஞ்சகவ்வியம் என்பது பசு மாடு நமக்கு வழங்கும் பால்,தயிர்,நெய், பசுஞ்சாணம், கோமியம் ஆகிய ஐந்தும் சில விகிதாச்சாரத்தில் கலந்த கலவையாகும். ஓர் மனிதன் பஞ்சகவ்வியத்தை நிலத்தில் இடும்பொழுது அதை சாப்பிட்டால் அவனிக்கு ஒன்றும் ஆகாது. இதே அவன் ரசாயன உரத்தை உண்டால் அவனின் நிலையை நினைத்து பாருங்கள். தன் உடல் போன்றது தானே அந்த பயிறும் என உணரும் நிலை விவசாயிக்கு இல்லை.முற்காலத்தில் விவசாயம் செய்யும் விவசாயி ஒவ்வொருவரும் மாடுகளை வைத்திருந்தனர். தற்சமயம் நவீன கருவிகளான டிராக்டர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் மாடுக்கும் விவசாயிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. 

உலோகத்தை பயன்படுத்திய நம் முன்னோர் , நிலத்தை உழும் கலப்பை மற்றும் விதை வைக்கும் கலன் ஆகியவற்றை மரத்தில் வைத்திருந்தார்கள். இதற்கும் சில காரணங்கள் உண்டு. இரும்பில் இருக்கும் அயனிகள் காந்த மின்னூட்டம் அடைந்து விளைலங்களையும், விதையையும் உயிரற்றதாக்கிவிடும். விவசாயத்திற்கு பயன்படும் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழித்துவிடும். இதை அறிந்து கொண்ட வெளிநாட்டுகாரர்கள் மரத்தை கலப்பையாக பயன்படுத்துகிறார்கள். 

இந்தியன் என்றும் முன்னோர்களை உதாரணமாக எடுப்பதை காட்டிலும் வெளிநாட்டுகாரர்களையே உதாரணமாக்க விரும்புவான். இதனால் கூடிய சீக்கிரம் நாமும் மண்கலப்பையை பயன்படுத்துவோம் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

இது போன்ற இயற்கை வேளாண்மையை மேலும் தரம் உயர்த்தும் வண்ணம் ஜோதிடத்தையும் இணைத்து கொண்டால் மிக சிறப்பாக இருக்கும். கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப வேளாண்மை காரியங்களை செய்வதால் பல வகையில் முன்னேற்றம் உண்டு. உதாரணமாக சில கிரகங்கள் சார்ந்து செய்ய தகுந்த விவசாய கடமைகள்.

கிரகம்------------------------ தன்மை ----------------------- செயல்
குரு ------------------------ புதிய வளர்ச்சி------------------- விதைத்தல்
சனி ------------------------ மறைவு பொருட்கள் ------------- கிழங்கு பயிரிடல்
சுக்கிரன்-------------------- கவர்ச்சியான பொருள் -------------பூக்கள்/ தோட்டம்
சூரியன்---------------------நிர்வகித்தல்------------------------ களை / உரமிடல்
செவ்வாய்---------------- திடீர்செயல்கள்----------------------பயிர் சீர்செய்தல்
சந்திரன் -------------------- திரவலை------------------------ நீர்விடுதல்
புதன் ------------------------ திட்டமிடல் ----------------------- உழுதல்/விதைத்தல்

இதே போல திதி மற்றும் நட்சத்திரத்திற்கு சில தன்மைகள் உண்டு. இதை கொண்டு வேளாண்மை செய்யும் பொழுது பயிரில் உயிரோட்டம் இருக்கும். சாதாரண ரசாயண உரத்தில் ஒரு கனி 5 நாட்கள் கெடாமல் இருந்தால் , இயற்கைவிவசாயம் செய்யும் பொழுது 8 முதல் 9 நாட்கள் கெடாமல் இருக்கும். இத்துடன் வேதகால வேளாண்மை இணையும் பொழுது கனியின் ஆயுட்காலம் நிச்சயமாக உயரும். இதற்காக தனியாக "வேளாண்மை பஞ்சாங்கம்" ப்ரணவ பீடத்தில் விவசாயத்திற்கு என்றே வெளியிடப்படுகிறது.


பஞ்சகவ்வியம் மற்றும் இதர இயற்கை முறை களைப் பயன்படுத்துவது போக , மந்திர ஜபம் மூலம் பயிர்களை வளர்த்துவது எனும் முறை ஒன்று இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு அருகில் காயத்திரி மந்திரம் அல்லது மஹா மிருத்தியஜெய் மந்திரத்தை ஒலிக்கவிடுவதால் பயிர்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படிகிறது என நிரூபணம் செய்துள்ளோம். செடிகளுக்கு வேதமந்திரத்தால் உயிரோட்டம் பெருகிறது என்றால், மனிதர்களான நாம் அதை உண்டால் எவ்வளவு உயிரோட்டம் அடைவோம் என சிந்திக்க வேண்டும். வேதகால வேளாண்மை என்பது விவசாய விஞ்ஞானிகளாலும் ஏற்கப்பட்ட ஒன்று என கூற விரும்புகிறோம்.

மேலும் ப்ரணவபீடம் இயற்கை முறையிலோ அல்லது வேத கால வேளாண்மை முறையிலோ விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு உதவ காத்திருக்கிறது. உலகை வேதகால வேளாண்மையால் பசுமையாக்குவோம், கடவுளின் இருப்பை உணர்த்துவோம்.
நன்றி ஸ்வாமி ஓம்கார்

No comments:

Post a Comment