Saturday, March 16, 2013

மகாவதார பாபாஜி- செங்குத்தானப் பாறைகள் -வாழும் பேற்றை இன்னும் பெற்றிருக்கிறார்


மகாவதார பாபாஜி

 பத்ரிநாராணுக்கருகில் வடக்கு இமயமலையின் செங்குத்தானப் பாறைகள் -மகா குருவான பாபாஜி வாழும் பேற்றை இன்னும் பெற்றிருக்கின்றன
மரணமற்ற பாபாஜி ஓர் அவதாரமாவார்
பாபாஜியின் ஆன்மீக நிலை மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டது


உபநிஷதங்கள் ஆன்மீக முன்னேற்றத்தின் ஒவ்வொரு நிலையையும் நுட்பமாகப் பிரித்து வகைப் படுத்தியிருக்கின்றன.
சித்தர்-பூரணத்துவம் அடைந்தவர்
ஜீவன் முக்தர்  வாழும் பொழுதே முக்தியடைந்தவர்
பராமுக்தர் - தலையாய முக்தி-மரணத்தின் மீது முழு ஆதிக்கம்
பிறவிச் சுழற்சியிலிருந்து முழுவதுமாக தப்பித்தவர்.
பராமுக்தர் அரிதாக ஸ்தூல தேகத்திற்குத் திரும்பினால்-
தெய்விக நியமனம் பெற்ற ஓர் அவதாரமாகிறார்-
அவதார புருஷர் உலக நடப்பிற்கு உட்பட்டவரல்லர்
ஒளிபடைத்த அவர் தேகம் இயற்கைக்கு எவ்வகையிலும்
கடன்படுபதிலிருந்து விடுதலை பெற்றுள்ளது

பாபாஜியின்  நோக்கம்-தீர்க்கதரிசிகளுக்கு அவர்களுடைய்
சிறப்புக் காரியங்களை நடத்த உதவுவது
மறைந்துவிட்டிருந்த கிரியா கலையை மறுமலர்ச்சி பெறச் செய்தமை (சீடரான லாஹிரி மகாசயருக்கு-யோக தீட்சையை அருளியது)
தனித்த ஆனால் மெளன சக்தியாக எளிய மறைவிலேயே செயல்புரிதல்
அவதாரங்கள்-ஏதாவதொரு வரலாற்று நிகழ்ச்சியைவிட-மனிதனின் மெதுவான பரிணாம வளாச்சியில் அதிகமாக அக்கறை காட்டும் வேலையை மேற்கொள்ளுகிறார்கள்


மகான்கள் மக்களின் ஸ்தூல பார்வையிலிருந்து எப்பொழுதும்
தங்களை திரையிட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் நினைத்த
மாத்திரத்தில் ம்றைந்துவிடும் திறன் பெற்றுள்ளார்கள்
இக்காரணங்களினால் அவர்கள் பொதுவாக தங்களைப் பற்றி
மெளனத்தைக் கடைபிடிக்கும் படி தங்கள் சீடர்களுக்கு உத்தரவிடுவதாலும் ஆன்மீகச் சிகரமாக விளங்கும் பலர்
உலகிற்குத் தெரியாமலேயே இருந்து விடுகிறார்கள்

பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித்தாலும் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசியை ஈர்க்கிறான்.

சிரஞ்சீவித் தன்மை பெற்ற பாபாஜீ உடலில் வயதைக் குறிக்கும்
அடையாளங்களைப் பெறவில்லை அவர் இருபந்தைது வயதிற்கு
மேற்படாத இளைஞராகவே தோற்றமளிக்கிறார்
சிவந்த நிறமும் நடுத்தர உயரமும் பருமனுமுள்ள எழிலும் வலுவும் கொண்ட தேகம், காணக்கூடிய பிரகாசத்தை வீசுகிறது
அவருடைய கண்கள் கருமையும் சாந்தமும் கருணையும் கொண்டுள்ளது நீளமான ஒளிரும் கேசம் தாமிர நிறத்திலுள்ளது
சில சமயங்களில் அவருடைய் முகம் லாஹிரி மகாசயருடையதை ஒத்திருக்கிறது


பாபாஜி தம் ஸ்தூல உடலைத் தாங்கி இருப்பதற்கு ஒரே ஒரு
காரணம்தான் உள்நோக்கமாக இருக்கிறது-மனித வர்க்கத்திற்கு
அதன் சொந்த சாத்தியக் கூறுகளை ஒரு வலுவான உதாரணத்தினால் எடுத்துக் காண்பிக்கும் விருப்பமாகும்

மீ.ராமச்சந்திரன்
Details taken from Paramahansa Yogananda's book "Autobiography of a Yogi"

1 comment:

  1. நல்ல பகிர்வு ஐயா...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete