Sunday, March 17, 2013

ஷீரடி சாய்பாபாவின் அருளாசி (week 11/2013)


Posted: 10 Mar 2013 03:00 PM PDT
யாராவது உனக்கு கெடுதல் செய்தாலும்,அவர்களுக்குப் பிரதிகாரம்[எதிரடி]செய்ய வேண்டாம்;உபகாரமே செய்ய வேண்டும்.வாதப்பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டாம்;ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டாம்.அவரவர் அவரவருடைய ஷேமத்தைப்பற்றியே விசாரம் செய்யட்டும்.                                  ஸ்ரீ ஹரி  நம்மைக்  காப்பார்.-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
Posted: 11 Mar 2013 03:00 PM PDT
 சாதே: குரு சரித்திரம் பாராயணம் செய்து முடித்த ஏழாவது நாளில்  ஒரு கனவை கண்டு தீஷித்திடம்  அதைப்பற்றி எடுத்துரைத்தார். "பாபா குரு சரித்திரத்தை தமது கரங்களில் வைத்துக் கொண்டு அதன் உட்பொருளை, முன்னால் அமர்ந்து கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாதேவிற்கு விவரித்துக் கொண்டிருந்தார்."மறுநாள் காகா சாஹேப் தீஷித்திடம் இக்காட்சியைப்பற்றி அவர் தெரிவித்து சாயிபாபாவிடம் அதன் பொருளைப்பற்றி அறிய விரும்பினார்.

தீஷித்: "தேவா ( தெய்வமே) இந்தக் காட்சியால் சாதேவிற்கு எதனை குறிப்பிடுகிறீர்கள்?

பாபா: அவர் மற்றுமொரு சப்தாஹம் (7 நாள்) பாராயணம் செய்யவேண்டும். அதை அவர்   கவனமாகக் கற்பாராயின் அவர் தூயவராகி நன்மை பெறுவார். பரமாத்மாவும் மகிழ்வடைந்து இச்சம்சார வாழ்க்கையின் பந்தங்களிருந்து அவரை விடுவிப்பார்" 
Posted: 12 Mar 2013 03:00 PM PDT
பாபாவுக்கு சேவை செய்யும் அடியவர்,இறைவனிடம் ஒன்றுகலந்த உணர்வை அடைகிறார்.இதர ஸாதனைகளைத் தள்ளிவைத்துவிட்டு குருசேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும்,கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும்,பக்தனுக்கு தீமையே விளையும்.தேவை என்னவென்றால்,பாபாவின்மீது உறுதியான விசுவாசமே.மேலும்,பக்தன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்?ஒன்றுமில்லையே!அவன் செய்வதையெல்லாம் பாபாவன்றோ லாவகப்படுத்துகிறார்!பக்தன் தனக்கு வரப்போகும் அபாயங்களைப்பற்றி ஏதும் தெரிவதில்லை.பாபா அந்த அபாயங்களை விளக்குவதற்காகச் செய்யும் உபாயங்களுங்கூட பக்தனுக்குத் தெரிவதில்லை.
மூவுலகிலும் தேடினாலும் சாய்பாபாவைப் போன்ற தர்மதாதாவைக் காண்பதரிது.சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.

Posted: 13 Mar 2013 03:00 PM PDT
சாயி நாமம் மலைபோன்ற பாவங்களை அழிக்கும்;சாயி நாமம்  கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.சாயி நாமம் காலனின் கழுத்தை நெரிக்கும்.இவ்வளவு மகிமை உள்ள சாயி நாமத்தின் மீது ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும்,சாயி நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிபடுத்தும்.நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜபத்தைவிட சுலபமான வலி வேறெதும் இல்லை.சாயி நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை.நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் உட்பட்டதன்று.

"என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால்,அக்கரை சேர்ந்து விடுவீர்கள்;வேறு உபாசனை ஏதும் தேவையில்லை;அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.எவர் சாயி சாயி என்று சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ,அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்.எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்."-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
Posted: 14 Mar 2013 03:00 PM PDT
 பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!
இது எங்கும்,என்றும்,பிரமாணம் என்றும் அறிவாயாக."-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

Posted: 15 Mar 2013 03:00 PM PDT

சாயியின் முகத்தை நிலைத்துபார்த்தால்,பசி,தாகம்,அனைத்தும் மறந்து போகின்றன.இதற்கு நிகரான சுகம் ஏதும் உண்டோ?வாழ்க்கையின் சோதனைகளும் வேதனைகளும் மறந்தே போகின்றன.சாயி ஆனந்தத்தின் சுரங்கம்;அவர் பரிபூரணமான சமுத்திரம்;உண்மையான சாயி பக்தன் பாக்கியசாலியாவான்;பரமானந்தம் அவனுக்குத் தேவையில்லை.

Posted: 16 Mar 2013 03:00 PM PDT

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை பயபக்தியுடன் படித்தால்,சமர்த்த சாயி இன்முகம் காட்டி தரித்திரத்தை அழித்து ஞானத்தையும் செல்வத்தையும் அருள்வார்.
சித்தத்தை ஒருமுகபடுத்தி நம்பிக்கையுடன் சத் சரித்திரத்தில் ஒரு அத்தியாயமாவது தினமும் படிப்பவருக்கு அளவற்ற சுகம் கிடைக்கும்.ரோகத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியம் பெறுவர்.தரித்திரர்கள் செல்வர்களாவர்கள்.சந்தேகங்களும் மனக்கோணல்களும் அகன்று,உறுதியும் தெளிவும் பிறக்கும்.சத்சரித்திரம்  தினமும் செவிமடுக்கப்பட்டாலும்,அல்லது நியமமாகப் பாராயணம் செய்யப்பட்டாலும்,சமர்த்த சாயியின் பாதங்கள் சங்கடங்களனைத்தையும் நிவாரணம் செய்யும்.உடலைச் சுத்தம் செய்துகொண்டபின்,பிரேமையுடனும் நம்பிக்கையுடனும் ஏழு நாள்களில் படித்து முடிப்பவரின் விருப்பங்கள் நிறைவேறும்.



No comments:

Post a Comment